Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்11 அடி நீள மலைப்பாம்புடன் நீச்சல் - மாஸ் காட்டும் எட்டு வயது சிறுமி

11 அடி நீள மலைப்பாம்புடன் நீச்சல் – மாஸ் காட்டும் எட்டு வயது சிறுமி

இஸ்ரேலை சேர்ந்து எட்டு வயது சிறுமியின் ஆரூயிர் நட்பு 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு தான். வீட்டில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் மலைப்பாம்புடன் விளையாடுவதே இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு.

சிறுமி பிறந்தது முதல் இன்பார் என்பவர் இந்த மலைப்பாம்பை வளர்த்து வருகிறார். விஷமில்லா மலைப்பாம்புக்கு இவர்கள் பெலி என பெயர் சூட்டியுள்ளனர். இந்த பெயர் பியூட்டி அன்ட் தி பீஸ்ட் ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரத்தை தழுவி சூட்டி இருக்கின்றனர்.

இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் இந்த சிறுமி வளர்ந்து வருகிறார். இதன் காரணமாக எந்நேரமும் விலங்குகளுடன் இந்த சிறுமி வளர்ந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருப்பதால் இருவரும் அதிக நேரம் விளையாடுகின்றனர்.