கன்னியாகுமரி லோக் சபா தொகுதிக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்த குமார் கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்தார். இவர் மரணம் அடைந்ததையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்க்கு முன் 1969ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. நாகர்கோவில் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரியில் எம்பியாக இருந்த ஏ. நேசமணி 1968ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
இதைதொடர்ந்து இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து நின்ற எம்.மாத்தியாசை தோற்கடித்து 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றிபெற்றார்.