Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு 18 லட்சம் சம்பளம்.. பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் பணியாற்ற ஒரு...

ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு 18 லட்சம் சம்பளம்.. பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!

லண்டன் : பிரிட்டிஷ் அரச குடும்பம் சமீபத்தில் விண்ட்சர் கோட்டையில் ஹவுஸ் கீப்பிங் பணிக்கு வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. அதன் ஆரம்பகட்ட சம்பளம் இந்திய மதிப்பில் 18,50, 994 ரூபாய் ஆகும். தி ராயல் ஹவுஸ்ஹோல்டின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் படி, வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும். முழுநேர வேலை மட்டும் தான். இது லெவல் 2 apprenticeship (பயிற்சி) வேலை என்றும் அந்த இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வேலை குறித்து குறிப்பிடும் பொழுது, தேர்ந்தெடுக்கப்படும் நபர் வீட்டு பராமரிப்பு நிபுணர்களின் குழுவில் இணைந்து பணியாற்றுவார். அவர்களுடன் இணைந்து உட்புறங்களையும் மற்றும் பொருட்களை பராமரிப்பதற்கும், சுத்தப்படுத்தும் பணியை செய்ய வேண்டும் .இந்த அப்ரென்டிஸ்ஷிப் திட்டத்தில் 13 மாதங்கள் பயிற்சிக் காலம். பயிற்சிக் காலம் நிறைவுபெற்றதும் அந்த நபர் ராஜ குடும்பத்தின் நிரந்தர ஊழியராக நியமிக்கப்பட்டு, அங்கிருக்கும் ஹவுஸ் கீப்பிங் அணியுடன் இணைந்து பணியாற்றுவார்.

Job vacancy at british royal family castle with 18 lakh salary

இதற்கான தகுதியாக, விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தகுதி பெற்று இருக்க வேண்டும். நீங்கள் வெற்றியாளராக இருந்து அதற்கான படிப்பு தகுதி இல்லையென்றால் உங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக அந்த கல்வித்தகுதியை பெறுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்” என்று வலைதளத்தின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான சில அடிப்படை தகுதிகளாக புதிய திறன்களை கற்றுக்கொள்ளுதல், செயல்திறன் மிக்க அணுகுமுறை மற்றும் சவால்களை சமாளிக்க விருப்பம் காட்டுதல் ஆகியவை இருக்க வேண்டும். நடைமுறை எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும், உங்கள் வேலையில் எப்போதும் பெருமை கொண்டவராக இருக்க வேண்டும், எப்போதும் உயர்ந்த நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலை தங்குமிடத்துடன் வழங்கப்படும், ஊதியத்தில் சில ஏற்ற இறக்கங்கள் செய்யப்படும். விண்ணப்பதாரர் விண்ட்சர் கோட்டை அல்லது பக்கிங்ஹாம் அரண்மனையை அடிப்படையாகக் கொண்டு வேலை பார்ப்பர், ஆனால் ஆண்டு முழுவதும் மற்ற குடியிருப்புகளிலும் பணியாற்றுவார். அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்படும் மற்றும் பயண செலவுகள் கொடுக்கப்படும் ஓய்வூதிய பங்களிப்பு திட்டம், அத்துடன் பலவிதமான கேட்டரிங் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன என்றும் அந்த இணையதளத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .