Thursday, June 1, 2023
Homeசெய்திகள்சுருண்டு விழுந்த நாம் தமிழர்.. ஈரோடு கிழக்கில் கிளீன் போல்ட்.. டெபாசிட் போச்சே?

சுருண்டு விழுந்த நாம் தமிழர்.. ஈரோடு கிழக்கில் கிளீன் போல்ட்.. டெபாசிட் போச்சே?

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இமாலய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மாபெரும் வெற்றியை நோக்கி அந்த கட்சி சென்று கொண்டு இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஈரோடு கிழக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே எம்எல்ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா. இவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இவரின் மரணத்தை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு திமுக சார்பாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டார். அதேபோல் அதிமுக வேட்பாளராக கே.எஸ் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

இன்று காலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. தற்போது வரை வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46116 வாக்குகளை விட அதிகம் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பெரும்பாலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் 18124 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் பின் தங்கி உள்ளார். இவர் டெபாசிட் பெற 37 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும். இதனால் அவர் டெபாசிட் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் மூன்றாவது இடத்தில நாம் தமிழர் கட்சி 2521 வாக்குகளை பெற்று மோசமாக பின்னடைவை சந்தித்து உள்ளது. இங்கே நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார்.

நாம் தமிழர் கட்சி இங்கே டெபாசிட் இழக்கும் வாய்ப்புகள் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.