Monday, May 29, 2023
Homeசெய்திகள்உலகம்பலவீனமான அதிபர்.. போரை கூட தொடங்குவார்.. ஜோ பிடனை சீண்ட தொடங்கிய சீனா

பலவீனமான அதிபர்.. போரை கூட தொடங்குவார்.. ஜோ பிடனை சீண்ட தொடங்கிய சீனா

பீஜிங் : அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பிடன், ஒரு பலவீனமான அதிபராக இருப்பார் என்றும் அவருடைய நிர்வாகத்தில் சீன-அமெரிக்க உறவுகள் மேம்படும் என்கிற மாயையை நாடு கைவிட வேண்டும் என்றும் சீன அரசாங்க ஆலோசகர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஜோ பிடன் ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க இருக்கிறார். அதுவரை டிரம்ப் தான் அமெரிக்க அதிபராக இருப்பார். ஜோ பிடன் நிர்வாகத்தில் சீனாவுடனான உறவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முதலில் கூறப்பட்டது. காரணம் தற்போதைய அதிபர் டிரம்ப் சீனாவுடன் கடுமையான போக்கை கொண்டிருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு, வர்த்தக போர், தென்சீன கடல் பிரச்சனை என்று இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. இந்த நிலையில் தான் பிடன் அரசாங்கத்தில் சீனாவுடனான உறவு மேலும் மோசமடையும் என்று சீன அரசின் ஆலோசகர் கூறியுள்ளார்.

ஷென்ஜென் மாகாணத்தை சார்ந்த சிந்தனைக் குழுவான மேம்பட்ட உலகளாவிய மற்றும் சமகால சீன ஆய்வுகளின் தலைவராக இருக்கும் ஜெங் யோங்னியன், அமெரிக்காவுடன் உறவுகளை சரிசெய்ய ஒவ்வொரு வாய்ப்பையும் சீனா பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். நல்ல பழைய நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்காவில் இருக்கும் பனிப்போர் பருந்துகள் பல ஆண்டுகளாக அணிதிரட்டப்பட்ட நிலையில் உள்ளது, அவை ஒரே இரவில் மாறிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விதிகளின் படி நடந்துகொள்ள வேண்டும்

கடந்த வாரம் சீனா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோ பிடன், சீனா விதிகளின் படி நடந்துகொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியிருந்தார். இது சீனாவை தண்டிப்பது தொடர்பானது கிடையாது, விதிகளின் படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சீனா புரிந்துகொள்வது தொடர்பானது. இது ஒரு எளிய கருத்தாகும் என்றும் பிடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஜெங் யோங்னியன், நீண்டகால வியூகம் குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் சீனா குறித்து அமெரிக்காவில் இரண்டு கட்சிகளும் ஒருமித்த கருத்தில் இருப்பதாக தெரிவித்தார். சீனாவுக்கு எதிராக அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், பிடன் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பலவீனமான அதிபர்

ஜோ பிடன் ஒரு பலவீனமான அதிபர், அவரால் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாவிட்டால் ராஜாங்க நடவடிக்கையை மேற்கொள்ள ஏதாவது செய்வர், இதனால் சீனாவின் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. டிரம்ப் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டியதில்லை, ஆனால் பிடன் செய்வார். டிரம்ப் போரில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் ஜனநாயகவாதிகளின் அதிபர் பிடன் போரை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.