Friday, September 17, 2021
Home செய்திகள் உலக செய்திகள் உலகில் ஆயுத விற்பனையில் இந்த நாடுகள் தான் கிங்.. ஆனால் அதிலும் ஒரு ஆச்சர்யம் இருக்கு!

உலகில் ஆயுத விற்பனையில் இந்த நாடுகள் தான் கிங்.. ஆனால் அதிலும் ஒரு ஆச்சர்யம் இருக்கு!

வாஷிங்டன்: 2019 ஆம் ஆண்டு உலகில் ஆயுத விற்பனையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே நிகழ்த்தியிருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகின் ஆயுத வர்த்தகத்தை இரண்டு வல்லரசு நாடுகள் மட்டுமே கட்டுப்படுத்தி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதில் ஆச்சர்யம் கொடுக்கும் ஒரு விஷயமும் உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக அதிக ஆயுத விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 25 இடத்திற்குள் மத்திய கிழக்கு நாடுகளை ஒரு சேர்ந்த நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிகளவில் ஆயுத விற்பனையில் ஈடுபட்ட நிறுவனங்களின் பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள டாப் 25 நிறுவனங்களின் மொத்த விற்பனை 2019 ஆம் ஆண்டு 8.5 சதவிகிதம் உயர்ந்து 361 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது அல்லது ஐ.நா.வின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் ஆண்டு பட்ஜெட்டில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிக்கையின் படி, அமெரிக்காவின் ஆயுத வர்த்தகம் என்பது இந்த டாப் 25 நிறுவனங்களில் 61 சதவிகிதத்தை கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சீனா 15.7 சதவிகிதத்துடன் உள்ளது. இந்த டாப் 25 நிறுவனங்களில் முதல் பத்தில் 6 அமெரிக்க நிறுவனங்களும், 3 சீன நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன. ஒரே ஒரு பிரிட்டன் ஆயுத நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் நிறுவனம் ஏழாவது இடத்தில உள்ளது.

உலகளாவிய ஆயுத செலவினங்களைப் பொறுத்தவரை சீனாவும் அமெரிக்காவும் இரண்டு பெரிய நாடுகளாகும் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் லூசி பெராட் கூறியுள்ளார். ஆயுத விற்பனையை பொறுத்த அளவில் அமெரிக்கா தான் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது.

2019 ஆம் ஆண்டை பொறுத்தவரை சீன நிறுவனங்களின் ஆயுத விற்பனை 5 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்களை ஒத்துருப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ரோப் க்ரும்மன், ரேதியோன் மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன. சீனாவை சேர்ந்த AVIC, CETC மற்றும் நோரிங்கோ ஆகிய நிறுவனங்கள் ஆறு, எட்டு, ஒன்பது ஆகிய இடங்களில் உள்ளன. பத்தாவது இடத்தில் அமெரிக்க நிறுவனமான L3Harris டெக்னாலஜிஸ் நிறுவனம் உள்ளது.

இந்த விஷயத்தில் ஐரோப்பிய நிறுவனங்கள் சிதறிக்கிடக்கிறது. ஆனால் எல்லா ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தையும் ஒன்றிணைத்தால் அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்களின் அளவுக்கு கொண்டு வர முடியும் என்றும் லூசி பெராட் கூறினார். ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும், தலேஸ் ஆகியவை வலுவான இடங்களை கொண்டுள்ளன. மற்ற நிறுவனங்களை விட ஐரோப்பிய நிறுவனங்கள் அதிக அளவில் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆச்சர்யம் கொடுத்த மத்திய கிழக்கு

வரலாற்றில் முதல் முறையாக மத்திய கிழக்கில் இருந்து ஒரு நிறுவனம் இந்த பட்டியலில் முதல் 25 இடத்திற்குள் இடம் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் EDGE நிறுவனம் சில பாதுகாப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் 22 வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் உள்நாட்டு இராணுவ தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்காமல் உள்நாட்டு நிறுவனங்களிடம் வர்த்தகம் செய்வது மத்திய கிழக்கில் இருக்கும் ஆயுத நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஸ்டாக்ஹோம் அமைப்பின் ஆராய்ச்சியாளர் பீட்டர் வெஸ்மேன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல பிரஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒரே ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ரபேல் போர் விமானங்களின் ஏற்றுமதியால் 38 வது இடத்தில் இருந்த டசால்ட் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு 17 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் 2 நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. அல்மாஸ்-ஆன்டே நிறுவனம் 15 வது இடத்திலும், யுனைடெட் ஷிப் பில்டிங் 25 வது இடத்திலும் உள்ளன.

ரஷ்யா தன்னுடைய ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்கும் திட்டங்களை குறைத்துள்ளது. இதன் விளைவாக ரஷ்ய அரசிடமிருந்து குறைவான ஆர்டர்களே ஆயுத நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய திட்டங்கள் குறைவாக தொடங்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments