Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் 66 நாட்கள் சூரியனே உதிக்காது.. 80 நாட்கள் இரவே கிடையாது.. அலாஸ்காவில் இருக்கும் வினோத நகரம்

66 நாட்கள் சூரியனே உதிக்காது.. 80 நாட்கள் இரவே கிடையாது.. அலாஸ்காவில் இருக்கும் வினோத நகரம்

அலாஸ்கா : நவம்பர் 19 நேற்று மறைந்த சூரியன் இனி அடுத்த 66 நாட்களுக்கு உதிக்காமலே போனால் எப்படி இருக்கும்? அலாஸ்க்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தில் அதுதான் நடைபெற்றுள்ளது. ஆனால் இது வழக்கமான நிகழ்வு தான் என்கிறார்கள்.

பாரோ என்று அழைக்கப்படும் உத்கியாக்விக் (Utqiagvik) என்கிற ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் வருடாந்திர இருண்ட காலத்திற்குள் நுழைந்துள்ளது, இது துருவ இரவு என அழைக்கப்படுகிறது. இந்த “துருவ இரவு என்பது ஒவ்வொரு குளிர்காலத்திலும் பாரோ மற்றும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள வேறு எந்த நகரங்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு” என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூமியின் அச்சின் சாய்வு காரணமாக நவம்பர் மாதம் முதல் இப்பகுதியில் சூரிய ஒளியினை பார்க்க முடியாது. ஜனவரி மாதத்தின் கடைசி வாரம் வரை இதே நிலை தான் நீடிக்கும். இருப்பினும் நகரம் முழுவதும் இருளில் மூழ்காது என்றும் அடர்ப்பணியின் காரணமாக மிக மெல்லிய வெளிச்சத்தை உணர முடியும். இதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு சில மணிநேரங்கள் பார்க்க போதுமான வெளிச்சம் கிடைக்கும். இதை civil twilight ஆராய்ச்சியாளர்கள் என்று அழைப்பர்.

உத்கியாக்விக் நகரத்தில் சரியாக நேற்று மதியம் 1:30 மணிக்கு சூரியன் அஸ்தமனம் ஆகியுள்ளது. இனி ஜனவரி 23ம் தேதிக்கு பிறகு தான் அந்த நகரத்தில் சூரிய ஒளியை பார்க்க முடியும். இதனால் அலாஸ்காவை சேர்ந்த மக்கள் வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலமோ பகல் நேரத்தை பிரதிபலிக்கும் மகிழ்ச்சியான ஒளி என அழைக்கப்படும் ஒளியை நம்புவதன் மூலம் தயராகி வருவதாகவும் வட அலாஸ்கா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் அதிகாரி கார்சன் ஃபிராங்க் கூறியுள்ளார். எப்படி நவம்பர் மாதங்களில் 66 நாட்களுக்கு சூரியன் உதிக்காதோ அதேபோல இந்த பகுதிகளில் மே மாதம் 80 நாட்களுக்கு சூரியன் மறையாது. இதற்கு பூமி மற்றும் சூரியனின் இடையேயான தொலைவு பூமியின் அச்சின் சாய்வும் தான் காரணம்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments