Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்.. விரட்டி சென்ற ரஷ்ய கப்பல்.. நடுக்கடலில் நடந்த சம்பவம்

அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்.. விரட்டி சென்ற ரஷ்ய கப்பல்.. நடுக்கடலில் நடந்த சம்பவம்

மாஸ்கோ: ரஷ்ய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷ்ய கப்பல் துரத்தி சென்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக ரஷ்யா அமெரிக்க உறவு மீண்டும் பழைய நிலையை அடைந்து வருகிறது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் ரஷ்யாவுடன் சுமூக உறவை கொண்டிருந்தது அமெரிக்கா. ஜி7 மாநாட்டில் ரஷ்யாவும் கலந்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழைப்பு அளவுக்கு இருநாட்டு உறவும் இருந்தது. இதற்கு கடந்த முறை அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா மறைமுகமாக உதவியதும் காரணமாக சொல்லப்பட்டது.

ஆனால் இம்முறை ஜோ பிடன் வெற்றி பெற்றதில் இருந்து ரஷ்யா மீண்டும் அமெரிக்காவுடன் மல்லுக்கட்ட தொடங்கியது. ஜோ பிடன் வெற்றி பெற்றதை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் ரஷ்யா பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்று ரஷ்யாவின் கடல் பிராந்தியத்திற்குள் அத்துமீறியுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஜான் எஸ் மெக்கெய்ன் கப்பல்

இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த ஏவுகணை தாங்கிய யுஎஸ்எஸ் ஜான் எஸ் மெக்கெய்ன் கப்பல் ஜப்பான் கடலுக்கு அருகே ரஷ்யாவின் பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இயங்கி கொண்டிருந்ததை ரஷ்யாவின் போர்க்கப்பல் கண்டுபிடித்தது.

ரஷ்ய கப்பலின் அட்மிரல் வினோகிரேடோவ் அமெரிக்க கப்பலை வாய்மொழியாக எச்சரிக்கை செய்ததோடு, அவர்களை வெளியேற கட்டாயப்படுத்தும் விதமாக தாக்குதல் மேற்கொள்வோம் என்றும் அச்சுறுத்தியிருந்தார். இந்த எச்சரிக்கைக்கு பிறகு அமெரிக்க கப்பல் மீண்டும் சர்வதேச கடல் பகுதிக்குள் திரும்பி சென்று விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பசுபிக் கடற்பகுதியில் இருக்கும் ரஷ்ய கப்பல், அமெரிக்காவின் போர் கப்பலை கண்காணித்து வந்தன, அது மாஸ்க்கோவின் எல்லையை கடந்து 2 கி.மீ தூரம் உள்ளே நுழைந்திருக்கிறது. இந்த சம்பவம் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் நடந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல் அப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் ரஷ்ய கடலுக்குள் நுழைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் அட்மிரல் வினோகிரேடோவ் அதன் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் மற்றொரு போர் கப்பலையும் ரஷ்யா அந்த பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது அரிதானது, இது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் மோசமான இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments