Friday, September 17, 2021
Home செய்திகள் உலக செய்திகள் இப்போதே தொடங்கிவிட்ட வியாபார போட்டி.. அமெரிக்காவின் தடுப்பூசிக்கு போட்டியாக அறிவித்த ரஷ்யா

இப்போதே தொடங்கிவிட்ட வியாபார போட்டி.. அமெரிக்காவின் தடுப்பூசிக்கு போட்டியாக அறிவித்த ரஷ்யா

அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.’

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் படும் துன்பத்தில் இருந்து ஒரு தடுப்பூசி தங்களை மீட்காதா என்று உலக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் வைரஸ்க்கு எதிராக யார் முதலில் தடுப்பு மருந்து கொண்டு வருவது என்கிற போட்டி இருந்தால் மறுபக்கம் யாருடையது விலை குறைந்தது, யாருடைய தடுப்பூசியை மக்கள் அதிகம் பயன்படுத்த போகின்றனர் என்கிற போட்டியும் நிலவுகிறது.

முன்னதாக ஆக்ஸ்போர்டு தயாரிக்கும் தடுப்பூசி இந்தியாவில் மிக குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனங்களும் குறைந்த விலையில் தங்களுடைய தடுப்பூசி கிடைக்கும் என அறிவித்தன. இப்போது அதற்கு போட்டியாக அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை விட எங்களுடைய ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி விலை

இது தொடர்பாக வெளியிட்ட ட்வீட்டர் பதிவில் ஃபைசரின் அறிவிக்கப்பட்ட விலை 19.50 டாலர், மற்றும் மாடர்னா 50 – 74 டாலருக்குள் கிடைக்கும் என கூறப்பட்டிருக்கிறது ஆனால் உண்மையில் ஒரு நபருக்கு 39 டாலர் மற்றும் 50 – 74 டாலர் வரை செலவாகும். இந்த மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி ஒரு நபருக்கு 2 டோஸ்கள் தேவைப்படும். ஆனால் ஸ்புட்னிக் வி இதை விட குறைவான விலையில் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ரஷ்ய தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என்று கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ரஷ்யா உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்தது. ஆனால் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளும் முன்பே தடுப்பூசியை அறிமுகம் செய்ததால் உலக நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தன. ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான தேசிய ஆராய்ச்சி மையம்உருவாக்கியுள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சின் தகவலின் படி, இந்த தடுப்பூசிகள் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை தடுக்க கூடிய முழுமையான எந்த ஒரு தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துசேரவில்லை. அனைத்தும் இறுதிக்கட்ட மனித பரிசோதனையில் உள்ளது. இதற்கிடையே தான் ஒவ்வொரு நிறுவனங்களும் வியாபார நலனை நோக்கமாக கொண்டு இப்போதே போட்டி போட்டுகொண்டு தடுப்பூசி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றன.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments