Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் கொரோனா தடுப்பூசியை குறிவைத்த ஹேக்கர்கள்.. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட தகவல்

கொரோனா தடுப்பூசியை குறிவைத்த ஹேக்கர்கள்.. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட தகவல்

ரஷ்யா மற்றும் வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து குறித்த தகவல்களை திருட முயற்சி செய்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தடுப்பு மருந்து மட்டுமே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் வருகைக்காக உலகின் பல நாடுகள் காத்திருக்கின்றன. அதே சமயம் இந்த தடுப்பு மருந்து குறித்த தகவல்களை திருடவும் உலகம் முழுவதிலும் ஹேக்கர்கள் கண்கொத்தி பாம்பாக தேடிக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஆக்ஸ்போர்டு தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் திருட முயன்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல சீன அரசு ஆதரவுடைய ஹேக்கர்களும் தடுப்பூசி தயாரிப்பாளர்களை குறிவைத்துள்ளனர் என்று அமெரிக்க அரசு ஜூலை மாதம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ரஷ்யா மற்றும் வடகொரியாவை சேர்ந்த அரசின் மறைமுக ஆதரவுடன் செயல்படும் ஹேக்கர்கள் சிலர் கொரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்களை திருட முயற்சித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

முன்னணி மருந்து நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களிடமிருந்து மதிப்புமிக்க தரவுகளை திருட அரசு ஆதரவுடைய ரஷ்ய மற்றும் வட கொரிய ஹேக்கர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டுபிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு வலைப்பதிவில் அவர்களின் பெரும்பாலான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற முயற்சிகள் குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதில் பெரும்பாலான இலக்குகள் கனடா, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் தரவுகளை குறிவைத்து நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்ட ஹேக்கிங் குழுக்களில் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதில் ஒன்று ரஷ்யாவை சேர்ந்த Fancy Bear, மற்ற இரண்டும் வட கொரியாவின் லாசரஸ் குழு மற்றும் சீரியம் என்று அழைக்கப்படும் ஹேக்கிங் குழு ஆகும்

இதில் பெரும்பாலான முயற்சிகள், இவர்கள் இலக்குகளாக நிர்ணயித்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் லாக் இன் தகவல்களை எடுக்கும் முயற்சியாகவே இருந்துள்ளது. லாசரஸ் குழு தங்களை வேலைக்கு ஆள்சேர்ப்பவர்களாக காட்டிக் கொண்டது. சீரியம் குழு போலியான மின்னஞ்சல்களை கொண்டு செயல்பட்டுள்ளது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments