Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் பீட்ஸா கடையில் வேலை செய்யும் ஒரே ஒரு நபர் சொன்ன பொய்.. விளைவு கடுமையான ஊரடங்கு!

பீட்ஸா கடையில் வேலை செய்யும் ஒரே ஒரு நபர் சொன்ன பொய்.. விளைவு கடுமையான ஊரடங்கு!

சிட்னி : பீட்ஸா கடையில் வேலை செய்யும் ஒரே ஒரு நபர் சொன்ன பொய் காரணமாக ஏற்பட்ட கிளஸ்டரால் இப்போது தெற்கு ஆஸ்திரேலிய நகர் முழுவதுமே கடுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு மொத்தம் 27 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. ஆனால் தற்போது திடீரென தெற்கு ஆஸ்திரேலிய மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிளஸ்டரில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான் பீட்ஸா கடையில் வேலை செய்யும் ஒரே ஒரு நபர் மூலம் பெரிய கிளஸ்டர் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள தென் ஆஸ்திரேலியா மாநில பிரதமர் ஸ்டீவன் மார்ஷல், கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரின் தொடர்புகளை கண்டறிந்த போது அவர் ஊட்வைல் என்கிற ஒரு உணவு கடையில் இருந்து பீட்ஸா வாங்கியதாக கூறினார். ஆனால் அந்த மனிதர் இன்னொருவருடன் சேர்ந்து அதே கடையில் வேலை பார்த்திருக்கிறார் என்பது இப்போது தான் தெரிய வந்தது. அவருடன் வேலை பார்த்த இன்னொரு நபருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

அதிகாரிகள் ஆரம்பத்தில் அவர் ஒரு ஹோட்டலின் காவலாளியாக மட்டுமே பணி புரிவதாக நினைத்திருந்தனர், இதனால் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளதாக எண்ணினர். ஆனால் அவர் காவலாளியாக மட்டுமல்லாமல் பீட்ஸா கடையில் பார்ட் டைம் வேளையிலும் ஈடுபட்டிருக்கிறார். இதை அவர் எங்களிடம் சொல்லவில்லை, நாங்கள் பின்தொடர்ந்து பார்த்த பொழுது உண்மை வெளிப்பட்டுள்ளது என்று மார்ஷல் கூறியுள்ளார்.

இந்த நபர் காண்டாக்ட் டிரேசிங் செய்த குழுவிடம் உண்மையை கூறியிருந்தால் இப்போது ஆறு நாள் கடுமையான லாக்டவுன் போடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நபர் தொடர்பு கொண்டவர்கள் குறித்த தகவலை மறைத்ததன் மூலம் மேலும் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இவருடைய செயல் குறித்து நான் கவலை கொள்கிறேன், இவருடைய சுயநல நடவடிக்கை எங்கள் முழு மாநிலத்தையும் கடினமான சூழ்நிலையில் ஆழ்த்தியுள்ளது. ஆறுநாட்கள் லாக்டவுன் போடப்பட்டிருந்தாலும் முன்கூட்டியே அதை தளர்த்த திட்டமிட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த நபர் கொடுக்கப்படும் தண்டனை குறித்து கூறிய போலீஸ் கமிஷனர் கிராண்ட் ஸ்டீவன்ஸ், தற்போதைய சட்டத்தின்படி, காண்டாக்ட் டிரேஸ் கண்டறிந்தவர்களிடம் பொய் சொன்னதற்கு அபராதம் எதுவும் இல்லை, ஆனாலும், இதுகுறித்து மறுமதிப்பீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments