Thursday, June 30, 2022
Homeசெய்திகள்உலக செய்திகள்நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த மலையாளம்.. சென்னை பெண்ணை கொண்டாடும் கேரளா மக்கள்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த மலையாளம்.. சென்னை பெண்ணை கொண்டாடும் கேரளா மக்கள்

வெலிங்டன் : நியூசிலாந்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசியது வைரலாகியுள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றிபெற்று பிரதமராக தேர்வானார். இந்த தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ப்ரியங்கா ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ப்ரியங்காவுக்கு தன்னுடைய அமைச்சரவையில் இடம் கொடுத்தார் ஜெசிந்தா ஆர்டெர்ன். இதை தொடர்ந்து நியூசிலாந்தில் அமைச்சர் பதவி பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்கிற பெருமையை பெற்றார்.

Also Read: நியூசிலாந்தில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி பெண்.. யார் இந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்?

புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதில் ப்ரியங்கா ராதாகிருஷ்ணன் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சராகவும், சமூகம் மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ப்ரியங்கா ராதாகிருஷ்ணன் மலையாளத்தில் பேசினார்.

இவர் பிறந்தது சென்னையாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தான் என்பதால் மலையாள மொழியில் உரையாற்றியது கேரள மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் கேரளாவை சேர்ந்த சஷி தரூர் ப்ரியங்காவுக்கு ஒரு ட்வீட்டில் வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரியங்காவின் வெற்றியில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில் நியூசிலாந்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய வம்சாவளி பெண் ப்ரியங்கா ராதாகிருஷ்ணன் இந்தியாவுக்கு பெருமை சேர்கிறார். நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் உரையாற்றினார் என்றும் குறிப்பிட்டார். அவர் மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments