Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் இனி முதுமையே ஏற்படாது.. எப்போதும் இளமை தான்.. இஸ்ரேல் விஞ்ஞானிகளின் சாதனை!

இனி முதுமையே ஏற்படாது.. எப்போதும் இளமை தான்.. இஸ்ரேல் விஞ்ஞானிகளின் சாதனை!

டெல் அவிவ் : உடலில் உள்ள வயவதாவதற்கான செல்களை உயிரியல் ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் வயதாவதை தடுப்பது மட்டுமன்றி செல்களை இளமையாகவும் மாற்ற முடியும் என்பதை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் அனைவருமே உடலில் முதிர்வு ஏற்படுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. அதை எப்படியாவது தடுத்து நிறுத்தி இளமையாகவே இருக்கவே அனைவரும் விரும்புவர். பொதுவாக மனிதர்கள் முதுமை அடைவதில் ஆக்ஸிஜனுக்கு அதிக பங்கு உள்ளது. அதே ஆக்சிஜன் தெரபி மூலம் தான் இப்போது இஸ்ரேல் விஞ்ஞானிகள் ரிவர்ஸ் ஏஜிங் செய்து உடலில் இருக்கும் செல்களை முதுமை அடைவதில் இருந்து மட்டும் தடுத்து நிறுத்தாமல் அதை இளமையாகவும் மாற்றியுள்ளனர்.

ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி

டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஷமிர் மருத்துவ மையம் ஆகியவை இணைந்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அதில் ஆரோக்கியமான வயதானவர்களுக்கு மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை (ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி) மேற்கொள்ளும் பொழுது உடலில் உள்ள இரத்த செல்கள் வயதாவதை தடுக்கிறது மேலும் அதில் ரிவர்ஸ் ஏஜிங் என்பது நடைபெற்று முன்பு இருந்தது போல இளமையாக மாற்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

Telomeres

நம் உடல் வயதான நிலையை அடைவதற்கு இரண்டு முக்கிய செயல்முறைகள் உள்ளன. முதலில், ஒவ்வொரு குரோமோசோமின் முடிவிலும் பாதுகாப்பு பகுதிகளாக இருக்கும் Telomeres குறைய தொடங்குகின்றன. இரண்டாவது, பழைய மற்றும் செயலற்ற செல்கள் உடலில் குவிய தொடங்குகிறது. இதனால் Telomeres மற்றும் senescent இரண்டையும் மையமாக வைத்தே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த குழு ஒரு தனித்துவமான சிகிச்சை முறையை உருவாக்கியது. அதில் உயர் அழுத்த ஆக்ஸிஜனைப் பயன்படுத்திய போது மேற்கண்ட இரண்டு செயல்முறையும் தடைபட வாய்ப்பிருப்பதை கண்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது 64 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆரோக்யமாக இருக்கும் 35 பேருக்கு வாரத்திற்கு 5 நாட்கள் என்கிற ரீதியில் தினமும் 90 நிமிடங்கள் ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி மூலம் தூய ஆக்சிஜன் மூன்று மாதங்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்முடிவில் Telomeres, 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டதை போல் மாறியதை கண்டுபிடித்தனர். உடல் பாகங்களும் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பியது.

இதுகுறித்து இந்த ஆராய்ச்சியின் முன்னணி ஆசிரியர் ஷாய் எஃப்ராட்டியின் கூறும்பொழுது, Telomeres-ல் மாற்றம் கொண்டு வருவது என்பது உயிரியல் துறையில் ஒரு தேடப்படும் பொக்கிஷம் போன்றது. இந்த ஆய்வில் ஒரு செயல்முறை வெற்றிகரமாக மாற்றப்பட்டது. உலகெங்கிலும் உள்ள அனைத்து மருந்து மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களும் Telomeres-ஐ நீட்டிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன, அவை ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி மூலம் நிகழ்த்த கூடியவை என்றார்.

நம்முடைய வாழ்க்கை முறை Telomeres சுருக்கத்தை ஒரு வரம்பிற்குள் பாதிக்கும் என்று அறியப்படுகிறது. இருப்பினும், இந்த ஆய்வு மூன்று மாத ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபிக்கு பிறகு தான் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இது மனிதர்களின் செல்லுலார் வயதாகுவதை மாற்றுவதற்கான முதல் படியாகும் என்று குழு நம்புவதாக இது தொடர்பாக வெளியான மருத்துவ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments