எகிப்து : சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் எகிப்து நாட்டில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சக்காரா பகுதியில் புதைகுழியில் இந்த கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான சவப்பெட்டிகளாகும் இவை.
எகிப்து நாட்டில் முந்தைய காலத்தில் அரசர்களின் உடல்களை பதப்படுத்தி சவப்பெட்டிகளில் அடைத்து வைக்கப்படும். அதுபோன்ற மம்மிக்கள் குறித்த பல தகவல்களும் கதைகளும் உண்டு. எகிப்தில் அவ்வப்போது நடைபெறும் தொல்லியல் ஆராய்ச்சிகளின் போது இதுபோன்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சவப்பெட்டிகள் கிடைப்பது வழக்கம். அப்படிதான் சக்காரா பகுதியில் புதைகுழியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட சவப்பெட்டியில் கண்டெடுக்க பட்டுளள்து.
அது ஆறாம் பேரரசின் சவப்பட்டி. முத்திரையிடப்பட்டு, நேர்த்தியாக வர்ணம் பூசப்பட்டு மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்டவை, அந்த பகுதியில் முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட இவை உயர்ந்த தரம் வாய்ந்தவையாக உள்ளன. அவை உயர் பதவியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தொல்பொருட்கள் உயர்மட்ட குழுவின் பொதுச் செயலாளர் மொஸ்தபா வாஸிரி கூறினார்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட அதே பகுதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 59 சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மேலும் பல புதையல்கள் அந்த பகுதியில் கிடைக்க வாய்ப்பிருக்கும் என்றும் வாஸிரி தெரிவித்துள்ளார்.
இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சவப்பெட்டிகளும், அதனுடன் தொடர்புடைய மம்மிகளும் கலைப்பொருட்களும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும், இது அடுத்த ஆண்டு பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.