கொரோனாவைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் லி மெங் யான் தெரிவித்து உள்ளார். இந்த பரபரப்பு தகவலை அவர் யூடியூப் பேட்டி ஒன்றில் அதரடியாக தெரிவித்து இருக்கிறார்.
உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால் சீனாவில் இருந்து தப்பிய லி மெங் கொரோனாவைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்க தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனாவைரஸ் தீவிரம் பற்றிய தகவல்களை சீனா உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் முன் அந்நாட்டு அரசுக்கு அவை முழுமையாக தெரிந்திருந்தது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். ஹாங்காங் பொது சுகாதார மையத்தில் பணியாற்றி வந்த லி மெங் யான் சார்ஸ் போன்ற வைரஸ் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
“ஆய்வில் அந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வக அதிகாரியிடம் தெரிவித்தேன். எனது ஆய்வு முடிவுக்கு சீன அரசு மற்றும் உலக சுகாதார மையம் சார்பில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், சீன அரசுக்கு பயந்து அதனை வெளியிட மறுக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த சுகாதார அமைப்பு, உலக சுகாதார மையம் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை லி மெங் யான் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.