Monday, May 29, 2023
Homeசெய்திகள்உலகம்கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்கள், மொபைல் ஸ்கிரீனில் 28 நாட்கள் வரை உயிர் வாழும்.. ஆய்வில்...

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்கள், மொபைல் ஸ்கிரீனில் 28 நாட்கள் வரை உயிர் வாழும்.. ஆய்வில் தகவல்!

ரூபாய் நோட்டுக்கள், மொபைல் போன் ஸ்கிரீன் போன்ற கண்ணாடி மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்டவைகளில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் வாழும் என்பதை கண்டறியும் ஆய்வில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

சமீபத்தில் இந்த ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். அதன்படி, ரூபாய் நோட்டுக்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் மொபைல் ஸ்கிரீன் போன்ற கண்ணாடி பரப்புகளில் கொரோனாவைரஸ் 28 நாட்கள் வரை வாழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read: Brain Eating Amoeba: மூளையை உண்ணும் நுண்ணுயிர்.. டெக்சாஸ் மாகாணத்தில் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் இறுக்கமான சூழல்களில் வைரஸ் தொற்று நீண்ட காலம் உயிருடன் இருக்கும் என தெரியவந்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகளை அடிக்கடி கழுவுதல் மட்டுமின்றி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ரூபாய் நோட்டுக்கள், மொபைல் ஸ்கிரீன் உள்ளிட்டவைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆய்வுகளின் போது 20, 30 மற்றும் 40 டிகிரி செல்சியசில் வைரஸ் குளிர்ந்த சூழல், மென்மையான பரப்புகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களில் நீண்ட நேரம் உயிருடன் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.