Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் யாரும் செல்ல முடியாத இருள் சூழ்ந்த இடம்.. உலகின் ஆழமான பகுதிக்குள் கப்பலை அனுப்பிய...

யாரும் செல்ல முடியாத இருள் சூழ்ந்த இடம்.. உலகின் ஆழமான பகுதிக்குள் கப்பலை அனுப்பிய சீனா

பூமியின் ஆழமான பகுதியான பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மரியானா அகழிக்குள் சீன விஞ்ஞானிகள் மூன்று மனிதர்களுடன் கூடிய சிறிய நீரில் மூழ்க கூடிய சிறிய கப்பல் ஒன்றை அனுப்பி படம் பிடித்துள்ளனர்.

ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே குவாம் என்ற சிறிய தீவுக்கு அருகில், நீரின் மேற்பரப்பிற்கு மிகக் கீழே, மரியானா அகழி அமர்ந்திருக்கிறது. மரியானா அகழி தான் பூமியில் அமைந்துள்ள கடலின் மிகவும் ஆழமான பகுதி, இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாத பல மர்மங்கள் இந்த ஆழ்கடல் அகழியில் தான் ஒளிந்துள்ளது.

இந்த ஆழ்கடலில் அமைந்துள்ள மர்மங்களை கண்டறிய பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதானது கிடையாது. கடலுக்கு அடியில் பல ஆயிரம் அடி கீழே செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கும் மேலும் சூரிய ஒளி வெளிச்சமும் இன்றி முற்றிலும் இருள் சூழ்ந்திருக்கும். உதாரணமாக முதல் 660 அடி ஆழத்திற்குள் 90 சதவிகித கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. 800 அடி ஆழத்தில் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் செல்லும், 1044 அடி தான் ஸ்கூபா டைவிங்கில் அதிகபட்ச சாதனையாக உள்ளது. 3300 அடிக்கு மேல் சூரிய ஒளி தெரிவது தடைபடும்.

8200 ஆடி ஆழத்தில் ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் இருக்கும். 25,262 அடியில் தான் ஆழ்கடலில் வாழும் உயிரினம் இதுவரை படம்பிடிக்கப்பட்டுள்ளது. இப்படி கடலுக்குள் அதிக ஆழத்திற்குள் செல்ல செல்ல ஒவ்வொரு தொடர்பும் துண்டிக்கப்படும் மேலும் நீரின் அழுத்தமும் அதிகரிக்கும், இதனால் யாராலும் அந்த பகுதிக்குள் எளிதாக சென்றுவிட முடியாது. இதுவரை மொத்தம் மூன்று பேர் தான் அதற்கான முயற்சியில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தான் சீன ஆராய்ச்சியாளர்களும் மரியானா அகழிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஃபெண்டூஷே என பெயரிடப்பட்டுள்ள கப்பல் 3 பேர் கொண்ட குழுவுடன் சுமார் 10 ஆயிரம் அடிக்கு மேலே ஆழத்திற்குள் சென்றுள்ளது. ஆழ்கடலில் படம்பிடிக்க கூடிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில் குப்பை மேகங்களால் சூழப்பட்ட கடலின் இருளில் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் நீரில் மூழ்கியுள்ள பொருட்கள் அசைந்துகொண்டு இருந்தன. ஆழ்கடலிற்குள் செல்லும் போது உயிரியல் மாதிரிகள் சேகரிக்க இயந்திர கைகள் இந்த கப்பலில் இணைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலி அலைகளை எழுப்பி அருகில் இருக்கும் பொருட்களை கண்டறியும் பொருட்டு சோனார் கண்களும் இதில் உள்ளது.

இந்த ஆராய்ச்சி மூலம் கடலின் அடி ஆழத்தில் இருக்கும் பல இனங்கள், மற்றும் உயிரினங்களின் தன்மை குறித்து தெரிந்துகொள்ள முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் நாங்கள் இதை ஒரு உண்மையான வெற்றி என்று அழைப்பதற்கு முன் இன்னும் இரண்டு சோதனைகளுக்கு மேல் எடுக்கும்” என்று சீன அறிவியல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆராய்ச்சியாளர் ஜு மின் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments