Friday, May 26, 2023
Homeசெய்திகள்உலகம்கேட்டது ஆரஞ்ச் ஜூஸ்.. கொடுத்தது டிடர்ஜெண்ட் சோப்பு ஜூஸ்.. நடந்தது என்ன..?

கேட்டது ஆரஞ்ச் ஜூஸ்.. கொடுத்தது டிடர்ஜெண்ட் சோப்பு ஜூஸ்.. நடந்தது என்ன..?

உணவகத்திற்கு சாப்பிட சென்றால் ஓட்டல் சப்ளையர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சில நேரங்களில் நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாகவும், சில நேரங்களில் மனக்கசப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சீனாவின் ஷேஜியாங் மாகாணத்தில் வுகோங்க் என்றப் பெண் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் ஆரஞ்சு ஜூஸ் கேட்டுள்ளனர். அந்த ஹோட்டலில் உள்ள பெண் ஊழியர் இவர்களுக்கு ஆரஞ்ச் ஜூஸ் வழங்கியுள்ளார்.

ஆனால், ஆரஞ்ச் ஜூஸ் குடிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலே கசப்பாக இருந்துள்ளது. சிறிது நேரத்தில் அதைக் குடித்த அனைவருக்கும் கடுமையான வயிறு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாததால் மருத்துவமனைக்கு சென்ற அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின்போதுதான் அவர்கள் குடித்தது ஆரஞ்ச் ஜூஸ் அல்ல, சுத்தம் செய்யும் டிடர்ஜெண்ட் சோப் பவுடர்.

இப்போது பாதிக்கப்பட்ட 7 பேரின் உடல்நலமும் சீராக உள்ளது. இவர்களுக்கு ஆரஞ்ச் ஜூசுக்கு பதிலாக சோப்பு ஜூசை வழங்கியவர் கண் பாதிப்பு உள்ளவர். அவர் அங்கு சுத்தம் செய்யும் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஆரஞ்ச் ஜூசுக்கு பதிலாக, சோப்பு கரைசலை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த சப்ளையர் அளித்த டிடர்ஜெண்ட் கிளீனர் பாட்டில் ஆரஞ்ச் ஜூஸ் பாட்டிலை போலவே இருந்ததால் பார்வை குறைபாடு உள்ள அந்த ஊழியர் மாற்றிக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.