டெக்சாஸ்: பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மூளையை பாதிக்கும் நுண்ணுயிர் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக டெக்சாஸ் ஆளுநர் அதிரடியான எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார். இந்த கிருமி ஏற்கனவே உயிரிழந்த ஆறு வயது சிறுவனின் உடலில் இருந்து பரவி இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அமீபா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பற்றி பிரேசோரியா கவுண்டி சுகாதார துறை அதிகாரிகள் செப்டம்பர் மாத துவக்கத்தில் எச்சரிக்கை விடுத்தனர். இது போன்ற கிருமிகள் லேசான சூடு கொண்ட சுத்தமான நீரில் காணப்படுகின்றன.
இது மனித உடலில் அவர்களது மூக்கின் வழியே சென்று பின் மூளையை சென்றடைந்து அதன் திசுக்களை அழிக்க ஆரம்பிக்கும். தற்சமயம் இந்த கிருமி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து எட்டு டெக்சாஸ் நகரங்கள் தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாதிப்பு மிகவும் தீவிரமானது. இது உடல்நலத்தை பாதித்து, உயிரை பறிக்கும் தன்மை கொண்டது என டெக்சாஸ் ஆளுநரிடம் மேயர் தெரிவித்து இருக்கிறார்.
எனினும், இந்த தண்ணீரால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.