கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நாட்களில் சாம்பல் புதனும் முக்கியமான நாளாகும். சாம்பல் புதன் நாள் இன்று கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டது. கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசி இயேசுவை வழிபடுவார்கள். உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சாம்பல் புதன் வழிபாட்டு நிகழ்வில் உக்ரைன் -ரஷ்யா போர் முடிவுக்கு வர ஏராளமான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்..
சாம்பல் புதன் என்றால் என்ன..?
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் அன்று புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3ம் நாள். ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கால் கொண்டப்படுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது.
ரோமில் வாழ்ந்த தொடக்க கால கிறிஸ்தவா்கள் இந்த தவக்காலத்தின் போது சாம்பலை ஒருவருக்கு ஒருவா் பூசிக்கொண்டனா். மத்திய காலத்திற்கு பின்புதான் சாம்பல் புதன் அன்று சாம்பலை நெற்றியில் சாம்பல் பூசும் வழக்கம் வந்தது. சாம்பல் புதன் தினத்தில் கிறிஸ்தவா்கள் தங்கள் பாவங்களை அகற்றிவிட்டு கடவுளின் மேல் இருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
சாம்பல் எங்கிருந்து கிடைக்கிறது?
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்று குருத்தோலை ஞாயிறு. அந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்திச் செல்வது வழக்கம். குருத்தோலை ஞாயிறு அன்று ஏந்திய குருத்துக்களை சேகாித்து அதை எாித்து அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை சாம்பல் புதன் அன்று பயன்படுத்துவார்கள்.
ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி இன்று காலை நடைபெற்றது.பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். சிறப்பு திருப்பலியில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி தேவாலயம் உள்பட உலகில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களில் சாம்பல் புதன் கொண்டாடப்பட்டது.