Thursday, December 8, 2022
Homeசெய்திகள்உலக செய்திகள்தைவானை வைத்து சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா.. 2.4 பில்லியன் கோடி ஒப்பந்தத்தின் பின்னணி

தைவானை வைத்து சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா.. 2.4 பில்லியன் கோடி ஒப்பந்தத்தின் பின்னணி

வாஷிங்க்டன்: தைவானுக்கு 2.4 பில்லியன் மதிப்புள்ள 100 ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த வாரம் தான் அமெரிக்கா தைவானுடன் 1 பில்லியன் மதிப்புள்ள ஏவுகணை ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த செயல் நிச்சயம் சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

இந்த ஹார்பூன் ஏவுகணைகளை விற்பதன் நோக்கம், தைவானின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அரசியல் ஸ்திரத்தன்மை, இராணுவ சமநிலை மற்றும் பிராந்தியத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை பராமரிக்கவும் உதவும்” என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கடலோர பாதுகாப்புக்கு 100 ஹார்பூன் ஏவுகணைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனம் தயாரிக்கும் இந்த ஏவுகணைகளை சமநிலை தளங்களில் நிலைநிறுத்தலாம் அல்லது அதற்கான வாகனங்களில் ஏற்றி அதன்மூலம் செலுத்தலாம்.

ஜனநாயக நாடாக இருக்கும் தைவான் தொடர்ச்சியாக சீனாவின் அச்சுறுத்தலின் கீழ் இருந்து வருகிறது. தைவான் சீனாவின் ஒரு நிலப்பகுதி என்றே சீன அரசாங்கம் கூறி வருகிறது. தைவானை ஆளுபவர்களை அதிபர் என்று அழைப்பதையும் சீனா விரும்பவில்லை. தேவைப்பட்டால், ஒரு நாள் அந்த தன்னாட்சி பிரதேசத்தை கைப்பற்றவும் சீனா திட்டமிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு அதிபராக சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பெய்ஜிங் தைவான் மீது இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது, அவர் தைவான் தன்னாட்சி பெற்ற நாடு சீனாவின் ஒரு அங்கம் கிடையாது என்று தொடர்ந்து மறுத்து வருகிறார்.இதற்கிடையே சீன போர் விமானங்களும் சமீப காலங்களில் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறுவது அதிகரித்துள்ளது.

How america using taiwan against china ?

இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா தைவானுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள 135 AGM-84H/K SLAM-ER என்கிற துல்லியமாக வழிகாட்ட கூடிய வானில் இருந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை வழங்க ஒப்புதல் வழங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக சீனா போயிங் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவான லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபட்டுள்ள பிற அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாகக் கூறியது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த தடைகள் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டதாகவும், தைவானுக்கு ஆயுத விற்பனையின் செயல்பாட்டில் மோசமாக நடந்து கொண்டவர்களுக்கு இது பொருந்தும் என்றும் கூறினார். இருப்பினும் அந்த தடை குறித்த விரிவான தகவலை அவர் வழங்கவில்லை. இந்த நிலையில் தான் இப்போது அதற்கும் பதிலடியாக அமெரிக்கா மீண்டும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்கனவே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருகிறது. தென்சீன கடல் எல்லை உட்பட பல விவகாரங்களில் இருநாடுகளுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இதற்கிடையே தான் சீனாவை மேலும் சீண்டும் விதமாக அமெரிக்கா தைவானை கையில் எடுத்துள்ளது. ஏனெனில் தைவானை தனி நாடு என்று யார் அங்கீகரித்தாலும் அது சீனாவுக்கு ஆத்திரமூட்டும் செயலாகவே இருக்கும். இந்திய ஊடகங்கள் தைவான் அரசு விளம்பரங்களை வெளியிட்டதற்கே சீனா ஆட்சேபனை தெரிவித்தது. இப்போது சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை தற்காத்துக்கொள்ள அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்க அனுமதி வழங்கியது அமெரிக்காவின் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments