Friday, September 17, 2021
Home செய்திகள் உலக செய்திகள் சீனாவுக்கு எதிரான நடவடிக்கை.. இந்தோ-பசுபிக் திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை.. இந்தோ-பசுபிக் திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா

ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்க நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா – இந்தோ பசுபிக் திட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார்.

17வது ஆசியான் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காணொலி வாயிலாக இந்த மாநாடு நடைபெற்றது. ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக உள்ளன.

நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் பங்கேற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார் அதன் பிறகு அவர் சார்பாக அமெரிக்க அதிகாரிகள் பங்குபெற்று வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த சிறப்பு ஆசியான் நாடுகளின் கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொள்ள இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் பேசிய ராபர்ட் ஓ பிரையன், அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளின் கூட்டணியால் கிட்டத்தட்ட 1 பில்லியன்க்கும் அதிகமான மக்களின் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு வழிவகுத்தது என்று கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரோஷமான நடவடிக்கைக்கு இடையே இந்த ஆசியான் நாடுகளின் மாநாடு நடைபெற்றது. பல ஆசியான் நாடுகள் தென் சீனக் கடலில் சீனாவுடன் பிராந்திய மோதல்களைக் கொண்டுள்ளன. தென்சீன கடல் பகுதியில் கிட்டத்தட்ட 90 சதவிகித பகுதியையும் சீனா தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் இப்பகுதியில் இருக்கும் செயற்கை தீவுகளில் சீனா இராணுவ தளங்களையும் உருவாக்கி வருகிறது, இது புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரும் பகுதிகளாகும்.

சமீப காலமாக தென்சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் அண்டை நாடுகளால் மீன்பிடித்தல் மற்றும் கனிம ஆய்வு போன்ற வணிக நடவடிக்கைகளுக்கு சீனா தடையாக உள்ளது. அந்த பகுதிகள் நூற்றாண்டு காலமாக தனக்கு சொந்தம் என்றும் திடீரென உரிமை கொண்டாட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்கா- இந்தோ பசுபிக் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments