Monday, September 27, 2021
Home செய்திகள் உலக செய்திகள் வேட்டைக்கார சிலந்தியுடன் வாழும் அதிசிய மனிதன்.. ஆஸ்திரேலியாவில் வினோதம்

வேட்டைக்கார சிலந்தியுடன் வாழும் அதிசிய மனிதன்.. ஆஸ்திரேலியாவில் வினோதம்

குயின்ஸ்லாந்து : ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வேட்டைக்கார சிலந்தியை செல்லப்பிராணியாக வளர்த்து வருவதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் ஷாங்க்ளின் நகரத்தை சேர்ந்த ஒரு ஜோடி, பிரபல ஆன்லைன் நிறுவனத்திடமிருந்து பெற்ற ஒரு டெலிவரி பார்சலுக்குள் ஒரு பெரிய வேட்டைக்கார சிலந்தி இருந்துள்ளது. அந்த பார்சல் குறுகிய காலத்திற்குள் டெலிவரி செய்யபட்டிருக்கிறது.

அதிலிருக்கும் பொருட்களை சரி பார்க்க திறந்து பார்த்த பொழுது அதனுள் 10 செ.மீ நீளமுள்ள சிலந்தி உள்ளே ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஒரு வித்தியாசமான தகவல் என்னவென்றால், இந்த வகை வேட்டைக்கார சிலந்திகள் ஆசியாவை பூர்வீகமாக கொண்டவை. அவை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன, ஆனால் இங்கிலாந்தில் இவ்வகை சிலந்திகள் இல்லை. அதைக்கூட அவர்களின் பொல்லாத நேரம் என்று சொல்லலாம்.

சிலந்தி

ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டில் சிலந்திகளின் அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஜேக் கிரே என்பவர் சமீபத்தில் ஒரு பெரிய வேட்டைக்காரர் சிலந்தி தனது வீட்டின் சுவரில் ஊர்ந்து செல்லும் புகைப்படங்களைப் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் ஆச்சர்யப்பட கூடிய விஷயம் எதுவும் இல்லை தான். ஆனால் அவர் அதனுடன் தான் ஒரு வருடமாக வாழ்ந்து கொண்டு வருவததாக கூறியுள்ளதும், அதன் வளர்ச்சியை உடன் இருந்தே பார்த்து வருவதும் தான் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த நபர் சிலந்தியை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கெய்ர்ன்ஸ் கிராமத்தில் இருக்கும் தனது வீட்டில் வைத்து, அதை ஒரு வழக்கமான செல்ல பிராணியை போல வளர்த்து பாதுகாத்து வருகிறார். இந்த பெரிய சிலந்தியின் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, நெட்டிசன்கள் எல்லோரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். சிலர் அதை வளர்ப்பது ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், பிளம்பர் ஒருவருடைய இரைச்சலை தடுக்கும் ஹெட்போனில் இருந்து வித்தியாசமான சத்தம் வெளிப்பட்டுள்ளது. அப்போது தான் அதை சோதனை செய்து பார்த்த போது அதன் ஓரத்தில் உல் பகுதியில் வேட்டையாடும் சிலந்தி இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். ஒருவேளை கவனிக்காமல் விட்டிருந்தால் அது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுளள்து.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments