Monday, May 22, 2023
Homeசெய்திகள்இந்தியாஎந்த நாடு உலகிலேயே மகிழ்ச்சியான நாடு..? பரிதாப நிலையில் இந்தியா..!

எந்த நாடு உலகிலேயே மகிழ்ச்சியான நாடு..? பரிதாப நிலையில் இந்தியா..!

உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டும் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பின்லாந்து

இந்த பட்டியலில் உலகிலே மிகுந்த மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பின்லாந்து நாடு கைப்பற்றியுள்ளது. பின்லாந்து நாடு இந்த பெருமையை அடைவது இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக உலகிலேயே மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பின்லாந்து தன்வசம் வைத்துள்ளது.

தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆயுட்காலம், சிவில் உரிமைகளை கடைப்பிடித்தல், வேலை பாதுகாப்பு மற்றும் ஊழலின் அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை பார்ப்போமா?

  • பின்லாந்து ( முதலிடம்
  • டென்மார்க்,(2வது இடம்)
  • ஐஸ்லாந்து (3வது இடம்)
  • இஸ்ரேல்(4வது இடம்)
  • நெதர்லாந்து (5வது இடம்)

இந்தியாவின் நிலை என்ன?

இந்த பட்டியலில் நம்முடைய இந்தியா 126வது இடத்தில் உள்ளது. அதுவும் சரிதான் நம் நாட்டு மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்களின் கவலைகளும் அதிகளவில் உள்ளது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்தியாவை விட பலத்திலும், பொருளாதாரத்திலும் சிறிய நாடான வங்காளதேசம் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது. அதாவது 119வது இடத்தில் உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை 112வது இடத்தில் உள்ளது.
பெரும் வல்லரசான அமெரிக்க இந்த பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது.

உக்ரைனுடன் சண்டையிடும் ரஷ்யா 70வது இடத்திலும் உக்ரைன் 92வது இடத்திலும் உள்ளது. கடைசி இடமான 137வது இடத்தில் சந்தேகத்திற்கே இடமில்லாமல் ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் நிகழும் கட்டுப்பாடுகளும், தலிபான்கள் ஆட்சியில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளும் நாம் தினசரி நாளிதழில் படிப்பதால் ஆப்கானிஸ்தானுக்கு ஏன் கடைசி இடம் என்பதை நாம் அறியலாம். உலகிலே மகிழ்ச்சியே இல்லாத நாடு என்றும் ஆப்கானிஸ்தானை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.