Monday, March 27, 2023
Homeசெய்திகள்இந்தியாநாட்டிலே அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் யார்..? முழு பட்டியல் உள்ளே!

நாட்டிலே அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் யார்..? முழு பட்டியல் உள்ளே!

நாட்டின் 2023 -2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் நாட்டிலே அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

மொரார்ஜி தேசாய்:

• நாட்டிலே அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மொரார்ஜி தேசாய். இவர் முன்னாள் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 10 மத்திய பட்ஜெட்டை இவர் தாக்கல் செய்துள்ளார்.

ப.சிதம்பரம்:

• முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவருக்கு அடுத்தபடியாக 9 பட்ஜெட்டை இந்தியாவிற்காக தாக்கல் செய்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா:
• நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 8 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

மன்மோகன்சிங் – கிருஷ்ணாமாச்சாரி:

• முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நாட்டின் நான்காவது நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரி தலா 6 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன்:

• நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 5வது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.