Monday, September 27, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் உலகிலேயே 3 மிகப்பெரிய இந்து கோயில்கள்... எங்கு அமைந்துள்ளது?

உலகிலேயே 3 மிகப்பெரிய இந்து கோயில்கள்… எங்கு அமைந்துள்ளது?

உலகிலேயே மிகபெரிய இந்து கோயில் கம்போடியா நாட்டில் அமைந்துள்ளது. இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் போன்ற கோயில்கள் முதல் பத்து வரிசையில் இடம் பெற்றிறுப்பது தமிழ்நாட்டின் சிறப்பையும், பெருமையும் வெளிக்காட்டுகிறது. இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் புதிதாக இடம் பெற்றிறுப்பது அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயில்.

1. அங்கோர் வாட் கோயில்

உலகிலேயே மிகபெரிய இந்து கோயில் என அழைக்கப்படும் அங்கோர் வாட் கோயில் கம்போடியா நாட்டில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் சுமார் 500 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் 12 ம் நூற்றாண்டில் கெமெர் இராஜ்ஜியத்தை சேர்ந்த இரண்டாம் சூர்யவர்மன் எனும் மன்னரால் கட்டப்பட்டது. விஷ்ணுவை முதன்மை தெய்வமாக வைத்து கட்டியுள்ளனர். இரண்டாம் சூர்யவர்மன் காலத்திற்கு பிறகு ஆண்ட மன்னர்கள், புத்தரை முதன்மை கடவுளாக மாற்றியமைத்து வழிபட்டுள்ளனர்.

இந்த கோயிலை சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மிகப்பெரிய அகழி உள்ளது. எதிரிகளிடமிருந்து இக்கோயிலை காப்பாற்றுவதற்காக இந்த அகழி அமைக்கப்பெற்றது என்று கூறப்படுகிறது.

ankor wat temple

இந்த கோயிலின் உள்ளே, கம்போடியா மக்களை பற்றியும் இரண்டாம் சூர்யா வர்மனின் ஆட்சி முறை பற்றியும் சிற்பங்களாக வடித்துள்ளனர். மேலும், மஹாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களும் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.

சோழ மன்னர்களுக்கும் கம்போடிய நாட்டு மன்னர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஸ்ரீ விஜய மன்னர்களை எதிர்கொள்ள முதலாம் சூர்யவர்மன் ராஜேந்திர சோழனின் உதவியை நாடினார் என்பதும் , இரண்டாம் சூர்யவர்மன் வியட்னாம் அரசை எதிர்கொள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் உதவியை நாடினார் என்பதும் வரலாறு. மேலும் சோழ மன்னர்களுக்கும் கம்போடிய நாட்டு மன்னர்களுக்கும் வணிக ரீதியான தொடர்பு இருந்துள்ளது.

இந்த கோயில் கம்போடிய மக்களால் தான் கட்டப்பட்டுள்ளது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தஞ்சை பெரிய கோயிலை போலவே அங்கோர் வாட் கோயிலும் எந்த கலவையும் இன்றி கற்கள் மேல கற்கள் வைத்து கட்டப்பட்டு உள்ளது. ஆகையால் தமிழர்கள் உதவியின்றி இந்த கோயிலை கட்டிமுடித்திருக்க முடியாது என்பதும் சிலரது ஆணித்தனமான கருத்தாக உள்ளது.

அங்கோர் வாட் கோயிலை கெளரவிக்கும் வகையில் கோயிலின் சின்னத்தை கொடியில் இடம்பெற செய்திருக்கறது கம்போடிய அரசு. மேலும் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த பிரமிப்புமிக்க கோயிலை பார்வையிட்டு செல்கின்றனர்.

2 . ரங்கநாதர் திருக்கோயில் :

ஸ்ரீ ரங்கநாதர் கோயில், திருச்சியை அடுத்து, காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட திருவரங்கம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவு நகரமாகும். இந்த நகரம் கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமையப்பெற்றுள்ளது. ஏழு சுற்று மதில்களும் ஒன்றுக்குள் ஒன்றாக செவ்வக வடிவில் அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் அமைந்துள்ள இரண்டு சுற்று மதில்கள் கடைகள், வீடுகள், தெருக்கள் என மொத்த நகரத்தையும் உள்ளடக்கியுள்ளது. உட்புறத்தில் அமைந்துள்ள ஐந்து சுற்று மதில்கள் கோவிலைக் கொண்டிருக்கின்றன.

Ranganathar Temple

இக்கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் அமைந்துள்ளன. ராஜகோபுரம் என்று அழைக்கப்படும் கோயிலின் தெற்கு கோபுரம் 236 அடி உயரம் கொண்டுள்ளது. இது ஆசியாவிலே மிக பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரியது.

விஷ்ணுவை பிரதான தெய்வமாக கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், 108 வைணவ திருத்தலங்களை குறிக்கும் திவ்யதேசங்களில் முதன்மையாய் கருதப்படுகிறது. இத்திருக்கோயில் மேல் அமையப்பெற்ற விமானம் நான்கு வேதங்களான ரிக், யசுர், சாம, அதர்வண ஆகிவற்றை குறிப்பிடும் வகையில் நான்கு கலசங்கள் நிறுவபெற்றுள்ளன .

மிகவும் புகழ் பெற்ற கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் இந்த கோயிலின் உள்ளே அமையப்பெற்ற மண்டபத்தில் தான் முதல் முதலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்பான யுனெஸ்கோ, இத்திருக்கோவிலின் பழமை மாறாமல் பாதுகாத்தற்கான விருதை 2017 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.

3. ராமர் கோயில்

பல சர்ச்சைகளை கடந்து அயோத்தியில் 120 ஏக்கரில் பிரமாண்டமாக அமையவுள்ள ராமர் கோயில் உலகிலேயே மூன்றாவது மிகபெரிய இந்து கோயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த கோயில் வடஇந்திய கட்டமைப்பான நாகர கட்டிடக்கலையில் அமையவுள்ளது.

இந்த கோயில் கட்டுவதற்க்காக 30 வருடங்களாக அனுப்பப்பட்டு வந்த செங்கல்களை கட்டுமானத்தில் பயன்படுத்த உள்ளனர். இந்த செங்கல்லில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஸ்ரீராம் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Ram Mandir

ராமர் கோயில் கட்டுமானத்தில், ஒவ்வொரு கல்லையும் இணைக்க செப்பு தகடுகள் பயன்படுத்தப்படும். மொத்த கட்டமைப்பில் 10,000 தகடுகள் தேவைப்படலாம் என்று ராமஜன்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மற்றும் இந்த கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலை கட்டிமுடிக்க 300 கோடி வரை செலவாகும் என்றும் , கோயிலை சுற்றி தேவையான வசதிகளை செய்ய 1000 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments