Monday, September 27, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் எல்லையில் பதட்டம் அப்படியே தான் உள்ளது.. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பரபரப்பு கருத்து

எல்லையில் பதட்டம் அப்படியே தான் உள்ளது.. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பரபரப்பு கருத்து

டெல்லி: லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலைமை இன்னும் பதட்டமான சூழலில் தான் இருப்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்தில் இருந்து எல்லையில் நிலைமை பதட்டமான சூழல் உள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அத்துமீற முயன்றதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட பிறகும் இன்னமும் அமைதி திரும்பவில்லை. பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் படி சீனா நடந்துகொள்ள மறுப்பதே இதற்கு முக்கிய காரணம். இதற்கிடையே ஏழு கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் எட்டாம் கட்ட ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையும் விரைவிலேயே நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தான் எல்லையில் இன்னமும் அதே நிலை தான் நீடிப்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இந்தியப் படைகளின் உறுதியான பதிலடியால் சீனாவின் பி.எல்.ஏ ராணுவம் லடாக்கில் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கிறது. இந்தியா இனி எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் எந்த விதமான ஆக்கிரமிப்பு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் எந்த விதமான மாற்றங்களை நிகழ்த்த அனுமதிக்க மாட்டோம். எல்லை மோதல்கள், தூண்டப்படாத ராணுவ நடவடிக்கைகள் மூலம் பெரிய மோதல்களுக்கு வழிவகை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானுடனான உறவு குறித்து பேசிய பிபின் ராவத், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தடையற்ற பினாமி யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது. அதோடு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடும் இந்தியா-பாகிஸ்தான் உறவை புதிய தாழ்வு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், மற்றும் பாலகோட் தாக்குதல் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயற்சிக்கும் நம்முடைய அண்டை நாட்டுக்கு வலுவான ஒரு செய்தியை அனுப்பியிருக்கும் என்றார்.

இதற்கிடையே நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இணையக் கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்து பேசுகையில், அமைதி ஏற்படுவதற்கான ஆசை இருந்தால் மட்டும் போதாது, போரை தடுப்பதற்கான திறனும் இருந்தால் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் . மேலும் இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய உறுதியாக உள்ளது என்றார். சீனாவுடனான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இவர்களுடைய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments