Friday, September 17, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் 76 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அறிய நிகழ்வு.. நாளை வானில் தெரியும் ப்ளூ மூன்

76 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அறிய நிகழ்வு.. நாளை வானில் தெரியும் ப்ளூ மூன்

கிட்டத்தட்ட 76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக முழு நிலவு தெரிய உள்ளது. எப்போதாவது ஒருமுறை நடக்க கூடிய இந்த நிகழ்வை ப்ளூ மூன் என்று அழைப்பர்.

பொதுவாக நிலவு ஒருமுறை பூமியை சுற்றிவர ஒரு மாதம் ஆகும், இதனால் மாதத்தில் ஒருமுறை மட்டுமே முழுநிலவு தெரியும். ஆனால் இந்த நிகழ்வை சரியாக கணித்தால் 29.531 நாட்கள் ஆகும். அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடங்கள், 38 வினாடிகள் எடுக்கும். இதனால் நிலவு பூமியை சுற்றிவர ஆகும் கூடுதல் நேரத்தினால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே மாதத்தில் இரண்டுமுறை முழு நிலவு தெரியும்.

உதாரணமாக பூமி சூரியனை சுற்றி வருவதை எடுத்துக்கொண்டால், ஒருமுறை பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள், 5 மணி, 48 நிமிடம், 46 விநாடி ஆகும். இந்த கூடுதல் நேரத்தை ஈடுகட்ட தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதம் கூடுதலாக ஒருநாள் சேர்க்கப்பட்டு லீப் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அப்போதும் 11 நிமிடம் 14 விநாடி கூடுதலாக இருந்த காரணத்தினால் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளில் ஒரு நூற்றாண்டில் மட்டுமே லீப் ஆண்டு சேர்க்கப்பட்டு 3 நூற்றண்டுகளின் போது ஒரு லீப் ஆண்டு கணக்கில் சேர்த்து கொள்ளப்படமாட்டாது. இப்படியான ஒரு கணக்கீட்டில் தான் ப்ளூ மூன் நிகழ்வும் ஏற்படுகிறது.

இதுகுறித்து நாசா தன்னுடைய வலைப்பக்கத்தில் விளக்கியுள்ளது. அதாவது ஒவ்வொரு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ப்ளூ மூன்ஸ் ஏற்படும் அடுத்து 2020 க்குப் பிறகு, ஆகஸ்ட் 2023, மே 2026 மற்றும் டிசம்பர் 2028 இல் ப்ளூ மூன்கள் தோன்றும். ஆனால் சராசரியாக ஒவ்வொரு 19 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஹாலோவீன் சமயங்களில் ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தெரிய இருக்கும் முழு நிலவு உலகின் பெரும்பாலான அணைத்து பகுதிகளிலும் தெரிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 1944 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரே நாளில் உலகம் முழுவதிலும் இந்த ப்ளூ மூன் தெரிவது இதுதான் முதல்முறை. இதனால் நாளைய நிகழ்வு மேலும் அரிதானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments