Monday, May 29, 2023
Homeசெய்திகள்இந்தியாஅடித்து நொறுக்கும் ப்ளூ காய்ச்சல்.. மக்களுக்கு இந்திய மருத்துவ கழகம் முக்கிய அறிவுரை

அடித்து நொறுக்கும் ப்ளூ காய்ச்சல்.. மக்களுக்கு இந்திய மருத்துவ கழகம் முக்கிய அறிவுரை

நாடு முழுக்க வேகமாகப் பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றன.  இது தொடர்பாக மக்களுக்கு இந்திய மருத்துவ கழகம் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

இந்தியாவில் முக்கியமாக சென்னையில் திடீரென மர்ம காய்ச்சல் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. ப்ளூ காய்ச்சல் Influenza A subtype H3N2தான் இந்த பரவலுக்கு காரணம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை திடீர் திடீர் ஏற்பட தொடங்கி உள்ளது.

ஒரு வாரம் என்று இல்லாமல் இரண்டு வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிக்க தொடங்கி உள்ளது குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி இந்த காய்ச்சல் ஏற்படுகிறது .

இந்த நிலையில்தான், இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களுக்கு இந்திய மருத்துவ கழகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

அதில்,

-மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

-காய்ச்சல் இருக்கும் போது வெளியே செல்ல வேண்டாம்.

-காய்ச்சல் இருந்தால் ஆண்டிபயாடிக் எடுக்க வேண்டாம்.

-காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

-கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும் .

-அடிக்கடி கை கழுவ வேண்டும்.

-என்பது போன்ற அறிவுரைகளை வழங்கி உள்ளது .

-மாநில அரசுகளுக்கு மத்திய அரசும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதில்,

-அதிக அளவில் மருத்துவ முகாம்களை நடத்துங்கள்.

கொரோனா சோதனைகளை நடத்துங்கள், என்று குறிப்பிட்டு உள்ளது.