Monday, September 27, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்.. உடனே மறுப்பு தெரிவித்த ராணுவம்.. என்ன நடந்தது?

ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்.. உடனே மறுப்பு தெரிவித்த ராணுவம்.. என்ன நடந்தது?

காஷ்மீர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத குழுக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு இந்திய ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தெளிவு படுத்தியுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத குழுக்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் முகாம்கள் கடுமையாக சேதம் அடைந்ததாகவும் இன்று மாலை தகவல் வெளியானது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், 4 பொது மக்கள் பலியானார்கள். அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள் .

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது பயங்கரவாதிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர், அப்போது ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் நான்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

இதன்மூலம் மிகப்பெரிய தீவிரவாத ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரேந்திர மோடி அரசாங்கம் காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியத்தில் இருந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து 4,052 முறை பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல் சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் தான் இன்று மாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் உடனடியாக ராணுவம் அந்த தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அப்படியான எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்றும் எல்லையில் நிலைமை பதற்றமாக இல்லை என்றும் ராணுவ தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments