Sunday, December 4, 2022
Homeசெய்திகள்இந்தியா செய்திகள்ஒரே நாளில் இரண்டு முக்கியமான இடங்கள்.. சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக UNSC-ல் மாற்றம் கோரும் இந்தியா

ஒரே நாளில் இரண்டு முக்கியமான இடங்கள்.. சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக UNSC-ல் மாற்றம் கோரும் இந்தியா

ஒரே நாளில் முக்கியமான இரண்டு இடங்களில் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுத்தியுள்ளது. குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆவதில் இருந்து இந்தியாவை தொடர்ந்து சீனா தடுத்து வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உலகின் சக்திவாய்ந்த அமைப்பாக உள்ளது. 15 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிரந்தரமில்லாத உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளுக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்.

இந்தியாவும் தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தான் உள்ளது. ஆனால் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முயற்சி செய்கிறது, இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட பிற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தாலும் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவை தடுத்து வருகிறது.

India requires reforms in UNSC, here's what pm modi said on BRICS summit

இந்த நிலையில் தான் இன்று பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எப்போதும் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும். ஐநா சபையை இந்தியா எப்போதும் மதிக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஐநாவின் அனைத்து அமைப்புகளிலும் மாற்றம் வேண்டும். கொரோனாவிற்கு பின் முக்கியமான மாற்றங்கள் அவசியம் ஆகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

டி.எஸ்.திருமூர்த்தி

பிரதமர் மோடி இவ்வாறு கூறியிருக்கும் அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75-வது அமர்வில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் பலவீனமான அமைப்பாக ஆக மாறியுள்ளது, அதன் பிரதிநிதித்துவ தன்மை காரணமாக நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக, சீர்திருத்தத்தின் அவசியம் குறித்த உணர்ச்சிபூர்வமான அறிக்கைகளைக் கேட்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து பேசிய டி.எஸ்.திருமூர்த்தி சீனா சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அடுத்தடுத்து முக்கியமான 2 இரண்டு சபையில் இந்தியா சீனாவின் நடவடிக்கைக்கு பதில் கொடுக்கும் விதமாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments