Friday, September 17, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. வழக்கு விசாரணையை யூடியூபில் லைவ் செய்த குஜராத் நீதிமன்றம்

வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. வழக்கு விசாரணையை யூடியூபில் லைவ் செய்த குஜராத் நீதிமன்றம்

குஜராத் : நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையை யூடியூபில் ஆன்லைனில் நேரலை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றம், கல்வி நிலையங்கள், வழிபட்டு தளங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அரசாங்கம் இப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தாலும் கல்வி நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல நீதிமன்ற நடைமுறைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது.

இந்த நிலையில் தான் குஜராத் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையை யூடியூபில் ஆன்லைனில் லைவ் செய்துள்ளனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு ஜூம் செயலி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்தநிலையில் இன்று நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தலைமை நீதிபதி விக்ரம் நாத் வழக்கு விசாரணையை யூடியூபில் நேரலை செய்வதற்கான உத்தரவை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் நடவடிக்கைகளில் கூட திறந்த நீதிமன்ற கருத்தை செயல்படுத்துவதற்கும் அதை விரிவுபடுத்தவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, முதலில் ஒரேயொரு வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் சோதனை முறையில் நேரடியாக ஒளிபரப்பப்படும். லைவ் ஸ்ட்ரீமிங்கின் இந்த முறையைத் தொடரலாமா அல்லது மாற்றியமைக்க வேண்டுமா என்பது இந்த பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பொதுநல வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த லைவ் ஸ்ட்ரீமிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிர்மா பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு மாணவர் தாக்கல் செய்த பொது நலன் வழக்கு ஒன்றின் உத்தரவில் நீதிமன்றம் இதுகுறித்து கூறியுள்ளது. நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதை பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக யூடியூபில் நேரலை செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் யூடியூபில் நேரலை செய்தது கிடையாது. இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments