Thursday, January 27, 2022
Homeசெய்திகள்இந்தியா செய்திகள்அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று - விரைவில் குணமடைய பிரதமர் மோடி விருப்பம்

அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று – விரைவில் குணமடைய பிரதமர் மோடி விருப்பம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த டிரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.

அதில், இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

அதிபர் டிரம்ப் மற்றும் மெலினாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பிரதமர் மோடி இருவரும் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

- Advertisment -

Most Popular

Recent Comments