Monday, September 27, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்.. பீகார் தேர்தலில் பாஜக எடுத்த பிரம்மாஸ்திரம்!

ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்.. பீகார் தேர்தலில் பாஜக எடுத்த பிரம்மாஸ்திரம்!

பீகார் : பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.

பீகாரில் இருக்கும் 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 28, நவம்பர் 3, மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். பீகாரில் இப்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் நிதிஷ் குமார் போட்டியிடுகிறார். தொடக்கத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைகள் இருந்த நிலையில் பாஜகவின் அமித் ஷா சந்தேகத்திற்கிடமின்றி நிதிஷ் குமார் தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என கூறி அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் தான் பாஜக கட்சி தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில் பல கவர்ச்சி அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் மக்களுக்கு இலவசமாக வழங்குவோம் என கூறியுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

19 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும், 30 லட்சம் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் பீகாரின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக இருக்கும், என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதீஷ் குமாருக்கு ஆதரவை வழங்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக காங்கிரஸ் – லோக் ஜனசக்தி கூட்டணி கடந்த புதன்கிழமை அவர்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் விவசாய கடன் தள்ளுபடிக்கு முன்னுரிமை கொடுத்தனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் மசோதாவை நிராகரிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. மேலும் லோக் ஜனசக்தி கட்சி முதலில் பிகார், முதலில் பிகாரி எனும் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், மாநிலத்தில் நிறுவனங்களை அதிகரிக்கவும் முடியும் என்றும் கூறியுள்ளது .

கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் திரும்பி பார்க்க வைத்த மஹாகத்பந்தன் எனும் பிரமாண்ட கூட்டணியை லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இருவரும் ஏற்படுத்தினர். பின்னர் இரண்டு கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கட்சிகள் பிரிந்து நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இப்போது நடைபெற உள்ள தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்வி யாதவ் 12 தேர்தல் பேரணிகளில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். அதே நேரம் நிதிஷ் குமார் ஐந்து பேரணிகளில் பங்கேற்க உள்ளார். ஆனால் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சஞ்சய் ஜெய்ஷ்வால் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments