Wednesday, June 29, 2022
Homeசெய்திகள்இந்தியா செய்திகள்பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் சிட்டி சென்டர்.. வருகிறது ஹைப்பர்லூப்!

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் சிட்டி சென்டர்.. வருகிறது ஹைப்பர்லூப்!

பெங்களூரு நகரில் ஹைப்பர்லூப் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமான பெங்களூரில் இது பொது மக்களின் நேரத்தை அதிகளவு மிச்சப்படுத்தும் என தெரிகிறது.

இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விர்ஜின் ஹைப்பர்லூப் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிறுவனம் இடையே கையெழுத்தாகி உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Also Read: டெல்லியில் இருந்து லண்டனுக்கு சொகுசு பேருந்து பயணம்.. கட்டணம் எவளோ தெரியுமா?

இதுதொடர்பான ஆய்வு தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் வழித்தடங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆறு மாதங்கள் என இரண்டு கட்டங்களில் நடத்தப்பட இருக்கிறது. ஹைப்பர்லூப் போக்குவரத்து முறையில் மணிக்கு 1080 கிலோமீட்டர் வேகத்தில் ஒரே சமயத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் பத்தே நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சிட்டி சென்டருக்கு பயணிக்க முடியும். சாலை வழி மட்டுமின்றி விமான நிலையத்திற்கு நான்கு ஆண்டுகளில் புறநகர் ரயில்வே சேவை மற்றும் மெட்ரோ கனெக்டிவிட்டி பெற இருக்கிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments