Monday, September 27, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள் கொரோனவும் காற்றுமாசுபடும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.. எய்ம்ஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்

கொரோனவும் காற்றுமாசுபடும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.. எய்ம்ஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்

டெல்லி : காற்றுமாசு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனதின் இயக்குனர் ரன்தீப் குளேரியா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மே மாதத்தில் இருந்து உச்சம் பெற தொடங்கியது இப்போது தான் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் குளிர்காலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குளேரியா அசோசெம் நிறுவனம் ஏற்பாடு செய்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலைகுறித்த ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு அலை உள்ளது. காற்றுமாசுபாடு இதை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது. எங்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவசரகாலத்தில் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து பார்த்ததில், நாங்கள் கண்டுபிடித்த விஷயம் என்னவென்றால், காற்றின் தரக் குறியீடு மோசமடையும்போதெல்லாம் அடுத்த 5-6 நாட்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சுவாச நோய்களுக்கான சேர்க்கை அதிகரித்தது. இது கடந்த 2-3 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் காட்டப்பட்டு உள்ளது, இப்போது காற்று மாசுபாடு மற்றும் கொரோனாவுடன் உடன் இணைந்து இது மிகப்பெரிய சுமையாக மாறப்போகிறது. எனவே, இந்த தொற்றுநோயைப் பொருத்தவரை நாம் பல முனைகளில் செயல்பட வேண்டும் என்றார்.

இந்தியாவில் இரண்டாம் அலைகுறித்த சந்தேகமே வேண்டாம். கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நிச்சயம் நாம் இரண்டாம் அலை பாதிப்பிற்குள் தான் சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்காக 1500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் அதில் 900 படுக்கைகள் வரை நிரம்பியிருந்தன. அதன் பிறகு அந்த எண்ணிக்கை 200 ஆக குறைந்தது இப்போது மீண்டும் 500 என்கிற அளவிற்கு அதிகரித்துள்ளது. அன்லாக் செயல்முறை தொடங்கியதில் இருந்து மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் குளேரியா கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் இப்போது மீண்டும் அதிகரிக்க மூன்று முக்கிய காரணங்களை ரன்தீப் குளேரியா சுட்டிக்காட்டியுள்ளார். மக்களிடையே கொரோனா குறித்த சோர்வு மற்றும் ஒழுங்கான அணுகுமாறு இல்லாததால் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறுதல், மாஸ்க் அணியாமல் செல்வது போன்றவையும், அடுத்து குளிர் காலங்களில் சுவாச பிரச்சனை தொடர்பான வைரஸ்கள் உச்சம் அடைவது, மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இருக்கும் மோசமான காற்றின் தரம் காற்றுமாசுபாட்டையும் அதிகரிக்க வழிவகுக்கும், காற்று மாசுபாட்டின் போது இறப்பு தொடர்ந்து அதிகமாக இருப்பதாக ஒரு தரவு காட்டுவதாகவும் அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுளளார்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments