Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியாஇரண்டரை மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் குறைந்த கொரோனாவின் பாதிப்பு

இரண்டரை மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் குறைந்த கொரோனாவின் பாதிப்பு

புதுதில்லி : ஜூலை மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று கொரோன வைரஸ் பரவல் இந்தியாவில் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,790 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிப்போட்டு விட்டது. உலகின் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது.இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்கவில் 80 லட்சத்திற்கு மேற்பட்டோரும் இந்தியாவில் 75 லட்சத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 52 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தான் அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவில் இதுவரை 75 லட்சத்து 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 67 லட்சத்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 1,15,197 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. குறிப்பக மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தான் அதிக பாதிப்பிற்கு உள்ளானது .

உலகில் புதிய கொரோனா பாதிப்பு ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. நாள் ஒன்றுக்கு 95 ஆயிரம் பாதிப்புகள் வரை ஏற்பட்டது. கொரோனாவின் முதல் பாதிப்பில் தப்பித்த கேரளா போன்ற மாநிலங்களும் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 5 ஆயிரம் புதிய கேஸ்கள் வருகின்றன. ஆனால் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் புதிதாக வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தமிழகத்தை முந்தியுள்ளது.

இந்த நிலையில் தான் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,790 புதிய கொரோனா கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.இது கிட்டத்தட்ட இரண்டரை மாதத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட குறைவான பாதிப்பு ஆகும். இந்த மாத தொடக்கத்தில் 75 ஆயிரம் வரை ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. ஆனால் ஞயிற்று கிழமை 8.59 லட்சம் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக எடுக்கப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவு என கூறப்படுகிறது. வழக்கமாக 10 முதல் 11 லட்சம் பரிசோதனைகள் எடுக்கப்பட்டும் . அதேநேரம் இந்தியா சராசரியாக 8 முதல் 9 லட்சம் பரிசோதனை எடுத்த சமயங்களில் 60 ஆயிரம் வரை புதிய கேஸ்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தியா உலகின் அதிக புதிய கேஸ்கள் பதிவாகும் நாடுகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையை சந்தித்து வரும் அமேரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இப்போது முன்னிலையில் உள்ளன. அரசு அமைத்த ஆய்வாளர்கள் குழு இதுகுறித்து கூறுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்கனவே உச்சத்தை எட்டிவிட்டது. இப்போது அது சரிவடைய தொடங்கியுள்ளது, எல்லாம் சரியாக சென்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அந்த குழு கூறியுள்ளது. குளிர் காலங்களில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்த நிலையில் இந்த குழுவின் ஆய்வு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.