Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியாஹைப்பர்சோனிக் அதிரடி வெற்றி - பாதுகாப்பு துறையில் புது மைல்கல் எட்டி மாஸ் காட்டும் இந்தியா

ஹைப்பர்சோனிக் அதிரடி வெற்றி – பாதுகாப்பு துறையில் புது மைல்கல் எட்டி மாஸ் காட்டும் இந்தியா

ஆயுத உற்பத்தியில் அடுத்தகட்டத்தை எட்டும் முயற்சியாக, அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா இறங்கி இருக்கிறது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக உள்நாட்டிலேயே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் (எச்எஸ்டிடிவி) உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனம் இன்று ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.03 மணியளவில், அக்னி ஏவுகணை பூஸ்டர் ஹைபர்சோனிக் வாகனத்தை 30 கி.மீ உயரத்திற்கு எடுத்துச் சென்றது. அதன்பின், ஹைபர்சோனிக் வாகனம் தனியாக பிரிந்தது.

அதன்பின் அதில் உள்ள ஸ்கிராம்ஜெட் என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது. இதன்மூலம் வாகனம் அதிவேகமாக உந்தப்பட்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் விண்ணில் சீறிப் பாய்ந்தது.