Wednesday, May 24, 2023
Homeசெய்திகள்உலகம்தீவு வாங்குறீங்களோ தீவு…? இவ்ளோ கம்மி விலையா..? போட்டி போடும் மக்கள்…!

தீவு வாங்குறீங்களோ தீவு…? இவ்ளோ கம்மி விலையா..? போட்டி போடும் மக்கள்…!

இந்த பூமியில் மூன்று பகுதி நீராலும், ஒரு பகுதி நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. நிலப்பகுதிகளில் பல இடங்களில் தீவுகளாகவே உலகில் காட்சி அளிக்கிறது. பல பெரிய நாடுகளும் இங்கு தீவுகளாகவே உள்ளன. அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளில் பல பகுதிகள் தீவுகளாகவே காட்சி தருகின்றன.

வெளிநாடுகளில் பல பகுதிகளில் உள்ள தீவுகள் அடிக்கடி விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் உள்ள பல கோடீஸ்வரர்களும் தங்களுக்கு சொந்தமாக தீவுகள் வைத்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு தீவு விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது இகுவானா தீவு. இந்த தீவுதான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பெரும்பாலும் ஒரு தீவின் விலை 100 கோடி ரூபாய், 150 கோடி ரூபாய் என்று கேள்விபட்டிருப்போம். ஆனால், இந்த தீவின் விலை நம்மை நிச்சயம் ஆச்சரியப்பட வைக்கும். இந்த தீவின் விலையானது இந்திய மதிப்பில் வெறும் ரூபாய் 3.75 கோடி மட்டுமே ஆகும்.

மொத்தம் 5 ஏக்கர் பரப்பளவிலான இந்த இகுவானா தீவில் தேங்காய் மரங்கள் பரவி உள்ளன. இந்த தீவில் மூன்று படுக்கைகள் கொண்ட வீடும், 28 அடி உயர தொலைத்தொடர்பு டவரும் அமைந்துள்ளது. மேலும் மீன்பிடிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் இந்த தீவு மிகவும் ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

இந்த தீவில் தொலைத்தொடர்பு வசதிகளும், வை-பை வசதிகளும் உள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரமான மும்பையில் ஒரு சொகுசு குடியிருப்பில் ஒரு ப்ளாட் விலையை காட்டிலும் இந்த தீவின் விலை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிற்கு 19.5 கிலோ மீட்டர் தொலைவில் நிகரகுவாவின் ப்ளூபீல்ட் கடற்கரை தளம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது