Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்திடீரென குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு இவ்வளவா?

திடீரென குறைந்த தங்கம் விலை – சவரனுக்கு இவ்வளவா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது. அதன்படி தற்சமயம் ஒரு சவரன் தங்கம் 39,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரண தங்கம் தற்சமயம் 4,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5126 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தூய தங்கம் ரூ.41008 விலையில் விற்கபடுகிறது.

வெள்ளியின் விலை:

தங்கம் போன்றே சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 3 ரூபாய் 40 காசுகள் குறைந்துள்ளது. விலை குறைப்பின் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 65.40 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.