Monday, March 27, 2023
Homeசெய்திகள்இந்தியாFAU-G: பப்ஜி மொபைலுக்கு மாற்றாக விரைவில் வெளியாகும் இந்திய கேம்

FAU-G: பப்ஜி மொபைலுக்கு மாற்றாக விரைவில் வெளியாகும் இந்திய கேம்

டெல்லி: இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் கேமாக இருக்கும் பப்ஜி மொபைலுக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து கோக்யூ தலைமை செயல் அதிகாரி விஷால் கொண்டல் FAU-G என்ற பெயரில் புது கேமினை அறிவித்து இருக்கிறார். இது பப்ஜி மொபைலுக்கு மாற்றான கேம் ஆகும்.

புது கேம் பற்றி அதிகளவு தகவல்கள் இல்லாத நிலையில், பெரும்பாலும் இது பப்ஜி போன்றே இருக்கும் என எதிர்பார்க்கலாம். பப்ஜி மொபைலுக்கு மாற்றான புதிய FAU-G கேம் பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமாருடன் இணைந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

பப்ஜி-க்கு மாற்றான FAU-G ஃபியர்லெஸ் அண்ட் யுனைட்டெட்: கார்ட்ஸ் என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இந்த கேமில் கிடைக்கும் 20 சதவீத இணைய வருவாய் பாரத் கீ வீர் டிரஸ்டிற்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கேமினை பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்க இருக்கிறது.