ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதால் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரிய பதவி கிடைக்க போவதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை நோக்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்று கொண்டு இருக்கிறார்.
ஈரோடு கிழக்கில் 104907 வாக்குகளை தற்போது வரை இளங்கோவன் ஈரோடு கிழக்கில் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் 41666 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் பின் தங்கி உள்ளார்.
மூன்றாவது இடத்தில நாம் தமிழர் கட்சி 7986 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்து உள்ளது. இதனால் திமுக கூட்டணியின் வெற்றி ஈரோடு கிழக்கில் உறுதி ஆகி உள்ளது.
இப்போது இளங்கோவன் வெற்றிபெறுவதால் அவருக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்கிறார்கள். தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இவர்தான் வயது அதிகம் உள்ள எம்எல்ஏ ஆவார். அதனால் அவருக்குத்தான் சட்டசபை குழு தலைவர் பதவி கிடைக்கும்.
தற்போது இந்த பதவியில் செல்வப்பெருந்தகை இருக்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் சீனியர். அவர்தான் இனி தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும். இதனால் செல்வப்பெருந்தகை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதோடு இளங்கோவன் வரும் பட்சத்தில் கட்சியில் உட்கட்சி பூசல்கள் குறையும். முக்கியமாக பதவியை இழக்கும் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது தலைவர் கேஎஸ் அழகிரிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
அதை சரிக்கட்டும் விதமாக செல்வப்பெருந்தகைக்கு பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ALSO READ | தென் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவாரா இ.பி.எஸ்…? சாத்தியமா? அசாத்தியமா?