ஈரோடு; ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது. கே. எஸ் தென்னரசுவின் இந்த தோல்வி அதிமுகவை முடக்கி போட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்கு அதிமுக வந்த பின் அந்த கட்சி வரிசையாக தேர்தல் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
மூன்று இடைத்தேர்தல்கள், ஒரு சட்டசபை தேர்தல், ஒரு நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று வரிசையாக தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது.
அதிமுக தொண்டர்களையும் இந்த தொடர் தோல்விகள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளாராம். இந்த தோல்வி காரணமாக எடப்பாடி மீது நிர்வாகிகள் அப்செட்டில் இருக்கிறார்கள். முக்கியமாக தொண்டர்களும் அப்செட்டில் இருக்கிறாரக்ள்.
இவர்களை எல்லாம் சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மீட்டிங் ஒன்றை நடத்த உள்ளாராம். அந்த மீட்டிங்கில் தோல்விக்கான காரணத்தை ஆலோசனை செய்வார்களாம். அதாவது தோல்விக்கு தன்னுடைய தலைமை காரணம் இல்லை என்பது காட்டுவதற்காகவும், பிரச்னையை வேறு பக்கம் திசை திருப்பவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை அல்லது நாளை மறுநாள் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.
ALSO READ | ஈரோடு கிழக்கில் அதிமுக தோற்க காரணமே இதுதான்.. பாய்ந்து வந்த டிடிவி தினகரன்.. என்னாச்சு?