சென்னை: தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தனக்கு பேச வாய்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க பொதுக்குழு கூட்டம் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. 67 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் காணொலி வாயிலாக பொதுகுழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தி.மு.க துணை பொதுச்செயலாளராக பொன்முடி நியமனம் செய்யப்பட்டதாக பொதுகுழுக் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் , பொருளாளர் டி.ஆர்.பாலு, து.பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவிலே முதன்முறையாக எனக்கு பேசவாய்ப்பளித்த தலைவர் @mkstalin அவர்கள் உள்ளிட்ட தலைமை கழகத்துக்கு நன்றி. எத்தனை இடர்கள் வந்தாலும் தமிழர் நலனுக்காகக் கழகம் தொடர்ந்து இயங்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட இப்பொதுக்குழு கழக வரலாற்றில் ஒரு மைல்கல்.
கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவிலே முதன்முறையாக எனக்கு பேசவாய்ப்பளித்த தலைவர் @mkstalin அவர்கள் உள்ளிட்ட தலைமை கழகத்துக்கு நன்றி. எத்தனை இடர்கள் வந்தாலும் தமிழர் நலனுக்காகக் கழகம் தொடர்ந்து இயங்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட இப்பொதுக்குழு கழக வரலாற்றில் ஒரு மைல்கல். pic.twitter.com/YfnSunY6Yu
— Udhay (@Udhaystalin) September 9, 2020