Monday, May 29, 2023
Homeசெய்திகள்சொன்னதை செய்த திமுக.. முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றிய ஸ்டாலின்.. மக்கள் குஷி

சொன்னதை செய்த திமுக.. முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றிய ஸ்டாலின்.. மக்கள் குஷி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் வென்ற நிலையில் ஆளும் திமுக அரசு முக்கியமான வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றி உள்ளது.

பெண்களுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் வாக்குறுதியை இன்னும் ஆளும் திமுக நிறைவேற்றவில்லை. மார்ச் 20 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கில் வென்ற திமுக தற்போது முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அவர் தனது அறிவிப்பில், திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்டாக உயர்த்தி, 01.3.2023 முதல் வழங்க உத்திரவிட்டுள்ளார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூபாய் 8.41 கோடி நிதியை அரசு மானியமாகமின்சாரத்துறைக்கு வழங்கும்.

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 01.03.2023 முதல், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க உத்திரவிட்டுள்ளார்கள். மேலும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூபாய் 53.62 கோடி நிதியை சேர்த்து மொத்தம் 484.52 கோடி ரூபாயை மின்சாரத்துறைக்கு மானியமாக அரசு வழங்கும்.

ALSO READ | யார் காரணம்.. தப்பு எங்கே நடந்தது.. விசாரிக்க போகும் எடப்பாடி பழனிசாமி