Thursday, June 1, 2023
Homeசெய்திகள்உலகம்‘அந்த மாதிரி’ படம் பார்க்க கூச்சமே படாத 2 கே கிட்ஸ் – ஆய்வில் வெளியான...

‘அந்த மாதிரி’ படம் பார்க்க கூச்சமே படாத 2 கே கிட்ஸ் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்ச்சிக்கு பிறகு செல்போனை பயன்படுத்தாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. செல்போன் மூலம் இளைஞர்கள் தங்களது அறிவையும், திறனையும் வளர்த்துக் கொள்வது எந்தளவு அதிகரித்துள்ளதோ, அதேபோல ஆபாச படங்கள் பார்ப்பதும் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2 கே கிட்ஸ்

காமன் சென்ஸ் மீடியா சமீபத்தில் டீனேஜர் எனப்படும் பதின்பருவத்தினரின் நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதாவது, 2 கே கிட்ஸ் எனப்படும் 2000த்திற்கு பிறகு பிறந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. “டீன் ஏஜ் மற்றும் ஆபாசப் படங்கள்” என்ற தலைப்பில் மேற்கொண்ட இந்த ஆய்வில் 1,350 பதின்ம வயதினரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. செப்டம்பர் 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பங்றே்றனர். அந்த ஆய்வில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பதின்ம வயதினர் ஆபாச படம் பார்ப்பதாக கூறியுள்ளனர்.

பதின்ம வயதினரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது, 58 சதவீதத்தினர் தற்செயலாக பார்க்கத் தொடங்கி ஆபாச படம் பார்ப்பதற்கு அடிமையாகியதாக தெரிய வருகிறது. ஆபாச படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர்கள் பார்க்கத் தொடங்கவில்லை.

ஆபாச படங்கள்

ஆய்வில் பங்கேற்ற பதின்ம வயதினரில் 44 சதவீதம் பேர் தாங்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலே பார்த்ததாக கூறியுள்ளனர். பல பதின்ம வயதினர் ஆன்லைனில் பலருடன் இணைந்து விளையாடும் விளையாட்டுகளை விளையாடும்போது நண்பர்கள் மூலம் ஆபாச படம் பார்க்கும் பழக்கத்திற்கு வந்ததாக கூறியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் மூலமாக 38 சதவீதம் பார்த்துள்ளனர். இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டிருந்தாலும், அது இன்னும் உலகம் முழுவதும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், 16 சதவீத பதின்ம வயதினர் சந்தா தளங்களைப் பயன்படுத்தியதாகவும், 18 சதவீதம் பேர் ஆபாச படங்களை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும்போதும் பார்த்ததாக கூறியுள்ளனர்.

வெட்கப்படவில்லை

இதில், அதிர்ச்சி தந்த தகவல் என்னவென்றால் 2 கே கிட்ஸ் எனப்படும் இந்த பதின்ம வயதினரில் பெரும்பான்மையானவர்கள் அதாவது 67 சதவீதம் பேர் ஆபாச படங்கள் பார்ப்பதற்காக தாங்கள் கூச்சப்படவில்லை என்று வெளியப்படையாகவே சொல்லிவிட்டனர். அதேசமயத்தில் 2 கே கிட்ஸ் பலரும் இணையதள வளர்ச்சியை பயன்படுத்தி நல்ல முறையில் தற்போதே சமூகத்தில் பிரபலங்களாக உலா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.