Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்"சூப்பர்" சிப்பாய்களை உருவாக்கும் திட்டம்.. ராணுவ வீரர்கள் மீது உயிரியல் சோதனை செய்யும் சீனா!

“சூப்பர்” சிப்பாய்களை உருவாக்கும் திட்டம்.. ராணுவ வீரர்கள் மீது உயிரியல் சோதனை செய்யும் சீனா!

பீஜிங்: சீன ராணுவத்தில் உயிரியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட வீரர்களை உருவாக்கும் விதமாக PLA ராணுவ வீரர்கள் மீது மனித சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனா தற்போது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே சீனா அமெரிக்காவை ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. மேலும், உலகின் மற்ற நாடுகளையும் பொருளாதாரம், மற்றும் ராணுவ ரீதியாக கட்டுப்படுத்தவும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை கட்டுப்படுத்த டிரம்ப் தலைமியிலான அமெரிக்க நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் சீனா எதையும் நிறுத்துவதாக இல்லை. சமீபத்தில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால் அது அமெரிக்காவுக்கு நிகரானதாக மாறிவிடும். மேலும் உலக நாடுகளுக்கும் சீனாவின் இந்த கட்டுப்படுத்தமுடியாத வலிமை அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தது. இதற்கிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியிருந்தார். மற்றும் ராணுவத்தில் நவீன மயமாக்குவது, தானியங்கி தொழில்நுட்பங்களை கொண்டுவருவது குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில் தான் சீனா வீரர்கள் மீது உயிரியல் சோதனை மேற்கொள்வதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் தலைவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வீரர்கள் மீது உயிரியல் சோதனை:

சீனாவின் பல முக்கியமான பொது முதலீட்டு திட்டங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒரு திரை மறைவை மட்டுமே வழங்குகின்றன. தன்னுடைய எண்ணங்களை செயல்படுத்துவதற்கான முயற்சியில் சீனா தொலைதூரம் சென்றுவிட்டது என்றும் ஜான் ராட்க்ளிஃப் கூறினார். “உயிரியல் ரீதியாக மேம்பட்ட திறன்களைக் கொண்ட வீரர்களை உருவாக்குவதற்கான முயற்சியில் சீனா, PLA இராணுவத்தின் வீரர்கள் மீது மனித சோதனைகளை நடத்தியுள்ளது என்பதை அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அவர் மேற்கோள்கட்டியுள்ளார். நாட்டின் புலனாய்வு அமைப்பில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய கவனத்தை ரஷ்யா மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து மாற்ற வேண்டியிருக்கும். இன்று நாம் முன்னால் உள்ள உண்மைகளை தெளிவான கண்களால் பார்க்க வேண்டும், அது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு சீனாவை முதன்மையாக கண்காணிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது என்றார்.

இவருடைய இந்த கட்டுரை உலகின் இரண்டு வல்லரசுகளுக்கு இடையே மோசமான உறவு இருந்து வரும் சூழலில் வெளியாகியுள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், சீனாவுடன் பெருமளவில் மோதல் போக்கை கடைபிடித்தது. கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றெல்லாம் டிரம்ப் கூறி வந்தார், சில சமயங்களில் அதை சீன வைரஸ் என்றும் கூட அழைத்தார். சீன ராணுவத்துடன் தொடர்புடையதாக கூறி சில சீன நிறுவனங்களுக்கும் தடை விதித்தார். இதனால் அடுத்து வரும் பிடன் அரசாங்கம் சீனாவுடன் சுமூக உறவை கடைபிடிக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு சீனாவே முட்டுக்கட்டை போடும் விதமாக சில விஷயங்கள் சரிசெய்ய முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என்றும் கூறியிருந்தது. இதன்மூலம் சீனாவே பிரச்சனையை சரிசெய்ய தயாராக இல்லாதது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது.

இந்த வார தொடக்கத்தில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல்வேறு அரசியல் அடக்குமுறை பிரச்சாரங்களைத் தொடங்கி செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். இது குறிப்பிட்ட கருத்தியலுக்கு எதிரான திட்டத்தில் இருந்து உருவானது என்றும் அவர் கூறினார். இப்படி இரண்டு நாடுகளும் மாறி மாறி குறைகூறி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய தேசிய புலனாய்வுத் தலைவர் ஜான் ராட்க்ளிஃப் விரைவிலேயே மாற்றப்பட இருக்கிறார். அவருக்கு புதில் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பிடனின் தேர்வான அவ்ரில் ஹைனஸ் அந்த பதவிக்கு வர இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.