Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியாபெங்களூரு: மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு.. என்ன காரணம்?

பெங்களூரு: மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு.. என்ன காரணம்?

பெங்களூரு நகரில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த இரு மாதங்களில் மட்டும் வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதற்கு மன அழுத்தம், பொருளாதார சிக்கல்கள், முறையற்ற வாழ்க்கைமுறை, சீரற்ற உணவு வழக்கம் மற்றும் ஊரடங்கு சவால்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனை செல்வதை தள்ளிவைக்கின்றனர். இதன் காரணமாக உடல்நிலை சீராவதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

நிதி நெருக்கடி, வேலையிழப்பு, முறையற்ற வேலை நேரம் மற்றும் இதர காரணங்களால் மக்களுக்கு மன அழுத்தம், விரக்தி போன்றவை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை அனைத்திற்கும் தற்போதைய வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் மன உளைச்சலே காரணம் என இருதயவியல் நிபுணர் ஸ்ரீகாந்த் ஷெட்டி தெரிவித்து உள்ளார்.

கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் அக்கறை செலுத்தாது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது பிரச்சனைகளை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது.

சமீப காலங்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் இளம் வயதினர், உடலில் எந்த பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் தான் என மூத்த இருதயவியல் நிபுணர் ஸ்ரீஹரி தாஸ் தெரிவித்தார்.

மேலும் ஐடி துறையை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பணி சார்ந்த மன உளைச்சல் தான் மாரடைப்பு பாதித்தவர்கள் எண்ணக்கை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். இதுதவிர உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டு இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் அவர் மேலும் தெரிவித்தார்.