Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியா11 மாதங்களில் 101 விதிமீறல்கள், 57200 ரூபாய் அபராதம்.. எங்க 'தல' க்கு எவளோ தில்லு...

11 மாதங்களில் 101 விதிமீறல்கள், 57200 ரூபாய் அபராதம்.. எங்க ‘தல’ க்கு எவளோ தில்லு பாத்தீங்களா!

பெங்களூரு: ராயல் என்ஃபீல்ட் புல்லட் உரிமையாளர் ஒருவருக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக 57,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 101 வழக்குகள் இவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராஜேஷ், வயது 25 , தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று சிக்னல் ஜம்ப்பிங்க்காக கோரமங்களா, விப்ரோ ஜங்க்ஷனில் போக்குவரத்து காவல் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார். இவர் மீது அன்று காலை 6 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இவரது கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்ததில் இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இவர் மீது கடந்த செப்டம்பர் 2019 இல் இருந்து இன்று வரை 94 விதிமீறல்கள் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மற்றும் இதற்கான அபராத தொகையை இவர் இதுவரை செலுத்தவில்லை.

இந்த விவகாரத்தை மேலதிகாரிக்கு எடுத்து செல்ல, இவரது வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் 5 .5 அடி உள்ள சல்லானை (Challan)ஒப்படைத்தனர்.

எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் ராஜேஷ், தினமும் ஒயிட் பீல்டில் உள்ள அலுவலகத்திற்கு இவரது புல்லட்டில் சென்று வருவார். பெரும்பாலான விதிமீறல் வழக்கு வீட்டிற்கும் பணியிடத்திற்கும் இடையிலான பயணத்தின் போது பதிவு செய்யப்பட்டது. மொத்த வழக்கில் 41 விதிமீறல்கள் ஹெல்மட் அணியாமல் சென்றதுக்காக பதியப்பட்டவை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர் மீது பதியப்பட்ட விதிமீறல்களுக்கான அபராத தொகையை வெள்ளிக்கிழமைக்குள் செலுத்தவேண்டும், தவறும் பட்சத்தில், நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த அபராத தொகையை செலுத்துவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கோரியுள்ளார் ராஜேஷ். அப்படி இவர் செலுத்தும் பட்சத்தில் அதிக அபராதம் செலுத்தியவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்.

15,000 ருபாய் அபராதம்:

2019 டிசம்பரில், 41 வயதுடைய காய்கறி விற்பனையாளர் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 15 ,400 ரூபாய் செலுத்தியுள்ளார். ஹெல்மட் அணியாமல் சென்றது போன்ற 71 குற்றங்கள் இவர் மீது பதியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.