Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்செப்டம்பர் 6-இல் பூமியை நோக்கி வரும் எகிப்து பிரமிடை விட இருமடங்கு பெரிய விண்கல்!

செப்டம்பர் 6-இல் பூமியை நோக்கி வரும் எகிப்து பிரமிடை விட இருமடங்கு பெரிய விண்கல்!

வாஷிங்டன்: எகிப்து பிரமிட் போன்று இருமடங்கு அளவு கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதை நாசா டிராக் செய்து வருகிறது. இது பூமியின் வட்ட பாதையில் செப்டம்பர் 6 ஆம் தேதி மதியம் 3.30 மணி வாக்கில் மோத இருப்பதாக கணிக்கப்படுகிறது. இந்த விண்கல் 270 மீட்டர் அகலமும், 886 அடி உயரமாக இருக்கிறது.

பூமியின் வட்ட பாதையை நோக்கி வருவதால் இந்த விண்கல் அப்பல்லோ என அழைக்கப்படுகிறது. இதனை வானியலாளர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தனர். இது 465824 (2010 FR) என அழைக்கப்படுகிறது.

எனினும், மற்ற கோள்களை போன்று இல்லாமல் இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என Center for Near-Earth Object Studies (CNEOS) தெரிவித்து இருக்கிறது.

இதுபோன்ற விண்கல்கள் பூமியை விட வெகு தொலைவில் இருப்பதால் பாதிப்பு இல்லை என்ற போதும் புவி ஈர்ப்பு வேகம் காரணமாக கணிக்கப்பட்டதை விட திடீரென அவை அருகில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இது புவி வட்ட பாதையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

விண்கல் சூரிய வெளிச்சத்தை ஈர்த்து பின் அதனை வெப்பமாகவோ கதிர்வீச்சாகவோ வெளியிடும் போது இது போன்ற மாற்றம் புவி வட்ட பாதையில் ஏற்படும்.

தற்போதைய தகவல்களின் படி இந்த விண்கல் பூமியில் இருந்து சுமார் 1.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. 16 ஆண்டுகளுக்கு பின் இதே தினத்தில் மற்றொரு சிறு விண்கல் பூமியை நோக்கி வருகிறது. இரு விண்கல்களாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.